கோமள வல்லியின் 30 வருட வரலாறு குறித்து மேடையில் விவாதிக்க தயார்: இளங்கோவன்
சென்னை:
மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் மணிசங்கர அய்யர் மீது நடந்த தாக்குதல் மிகவும் அநாகரீகமானதுஎன்று தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அரசு விழாவில் தொகுதி எம்.பியை மேடையில் வைத்துக்கொண்டு அநாகரீகமாகப் பேசியுள்ளார் ஜெயலலிதா.
மேலும் எங்களது கட்சித் தலைவர் சோனியா காந்தியையும் ஜெயலலிதா அவதூறாகப் பேசியுள்ளார். சோனியாகாந்தியை இழுத்து வந்து என்றெல்லாம் வார்த்தையைப் பிரயோகித்துள்ளார்.
சோனியா காந்தியை சவாலுக்கு அழைத்ததுபோல, இந்த கோமள வல்லியையும் (ஜெயலலிதாவை) மேடைக்குஅழைத்து வந்து, அவரது 30 ஆண்டு கால வரலாற்றை விவாதிக்க நாங்களும் தயாராகவே உள்ளோம்.
மேடைக்கு வர கோமள வல்லி தயாரா என்று சவால் விடுகிறேன் என்றார் இளங்கோவன்.
புதுவை போலீஸ் வழக்குப் பதிவு:
இதற்கிடையே மணிசங்கர அய்யர் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக புதுவை மாநிலம் காரைக்கால் பகுதிபோலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வன்முறைச் சம்பவம் நடந்த இடம் புதுவை மாநிலத்தின் எல்லைக்குள் வருவதால், இது குறித்து வழக்குப் பதிவுசெய்ய அம் மாநில காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து திருமலைராயன்பட்டனம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மணிசங்கர அய்யரை சந்தித்தகாரைக்கால் பகுதி காவல்துறைக் கண்காணிப்பாளர் ஸ்டான்லி, நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.அவரிடம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்த அடையாளங்களை அய்யர் தெரிவித்துள்ளார்.
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதுவதால் மணிசங்கர அய்யர் தொடர்ந்து காரைக்காலிலேயேதங்கியுள்ளார்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications