குமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு மிரட்டல்: விடிய விடிய சோதனை
தர்மபுரி
பெங்களூரிலிருந்து- கன்னியாகுமரி ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக எழுந்த வதந்தியால்விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது.
பெங்களூரிலிருந்து, கன்னியாகுமரி வரை செல்லும் ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, ரயில் ஓசூரில் நிறுத்தப்பட்டு விடிய விடிய சோதனைநடத்தப்பட்டது.
பெங்களூரிலிருந்து தினசரி கேரள மாநிலம் வழியாக கன்னியாகுமரிக்கு ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயில்இயக்கப்படுகிறது. வழக்கம் போல திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு ஐலண்ட் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரிக்குகிளம்பியது.
ரயில் கிளம்பிய ஒரு மணி நேரம் கழித்து, பெங்களூர் கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்திற்கு ஒருதொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர் ஐலண்ட் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் ஓசூர்-தர்மபுரி ரயில்நிலையங்களுக்கு இடையே குண்டு வெடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து ஐலண்ட் எக்ஸ்பிரஸ் சுமார் 10.30 மணியளவில் ஓசூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. போலீஸார்மோப்ப நாய்களுடன் பெட்டி, பெட்டியாக சோதனை நடத்தினர்.
பயணிகள் வைத்திருந்த சூட்கேஸ்கள், பைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. தண்டவாளத்திலும் சோதனைநடத்தப்பட்டது.
அதிகாலை வரை நீடித்த இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரியவந்தது.இதையடுத்து காலை 5 மணியளவில் ரயில் புறப்பட்டுச் சென்றது.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications