அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறது: ஜெயலலிதா குற்றச்சாட்டு
சென்னை:
இந்தியாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக உருவெடுக்கும் என்று அக் கட்சியின்பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதிமுக உருவாகி நாளையுடன் 32 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ளகடித விவரம்:
தனது கட்சியின் தொண்டர்களிடம் எந்தவிதமான செல்வாக்கும் இல்லாத ஒரு நபர் (மணிசங்கர அய்யர்), தனதுகட்சித் தலைமையிடம் முக்கியத்துவம் பெறுவதற்காக ஒரு நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்.
அதே போல நம் மீது பொறாமை கொண்ட ஒரு தீய சக்தி (திமுக தலைவர் கருணாநிதி), அந்த நபருடன் சேர்ந்துகொண்டு ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்து கொண்டிருக்கிறது.
இந்த நாடகங்கள், சதிகளை எல்லாம் அதிமுக வென்று காட்டும். மக்களுக்காக உழைப்பதே அதிமுகவின் ஒரேநோக்கம். அதிமுக உருவான நாளைக் கொண்டாடும் இந்த தருணத்தில் மக்களுக்குக்காக நம்மை மீண்டும் ஒருமுறை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.
மக்களுக்கு உழைப்பதே நமது கடமை என்று அதிமுக தொண்டர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
திராவிட பாரம்பரியத்தின் உண்மையான வாரிசு அதிமுக மட்டும் தான். 1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். இந்தக்கட்சியை உருவாக்கியபோது யாரும் அதை ஒரு கட்சியாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால், இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறோம். எதிர்கால இந்திய அரசியல் வரலாற்றை நிர்ணயிக்கப் போவதும்நாம் தான் (அடுத்த பிரதமர் ஜெயலலிதா தான் என்று அதிமுகவினர் பேசி வருவது குறிப்பிடத்தக்கது).
இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.


Click it and Unblock the Notifications
