மாலத் தீவு சிறைகளில் வதைபடும் தமிழர்கள்: காப்பாற்ற வைகோ கோரிக்கை
சென்னை:
மாலத் தீவு சிறைச் சாலைகளில் தமிழர்கள் சித்திரவதை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றுவெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கைவிடுத்துள்ளார்.
வேலூர் சிறையிலிருந்து யஷ்வந்த் சின்ஹாவுக்கு இது தொடர்பாக வைகோ எழுதியுள்ள கடிதத்தில்,
மாலத் தீவுக்கு வேலைக்குச் சென்ற தமிழர்கள் பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு வருவதுகுறித்து நான் கடந்த ஜனவரியில் உங்களுக்குக் கடிதம் எழுதினேன்.
அதற்கு நீங்கள் பதில் கடிதம் அனப்பினீர்கள். அதில் மாலத் தீவு சிறைக் கைதிகள் குறித்து அந் நாட்டு அரசு அளித்தவிளக்கத்தையும் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால், அதில பல உண்மைகளை அந் நாடு உங்களிடம் மறைத்துள்ளது.
இதை எனக்கு மாலத்தீவு சிறையில் இருந்து வெளியே வந்த ஒரு தமிழர் அனுப்பிய கடிதம் மூலம் அறிந்து கொள்ளமுடிந்தது. அவரது பேட்டியும் பத்திரிக்கைகளுளில் வெளியாகியுள்ளது.
அந் நாட்டு சிறைகளில் தமிழர்களுக்கு வெறும் சித்திரவதை மட்டும் நடக்கவில்லை, ஐக்கிய நாடுகள் சபைவிதித்துள்ள மனித உரிமைகள் முற்றிலும் மீறப்பட்டு வருகின்றன. எனது மாநில மக்கள்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு வருவதை அறிந்து துடிதுடித்துவிட்டேன்.
அந்த அளவுக்கு அங்கு பயங்கர தண்டனைகள் தரப்படுகின்றன. சிறையில் உள்ளவர்களை தூணில் கட்டிப்போட்டு, அவர்களது கால்களில் சர்க்கரையைக் கொட்டி, கட்டெறும்புகளால் அவர்கள் கடிபட்டுத் துடிக்கச்செய்கின்றனராம்.
ஆறடி ஆழம், இரண்டடி அகல குழிகளில் இறக்கிவிட்டு நாள் முழுவதும் நிற்க வைத்து சிறுநீர் கழிக்கவோ, மலம்கழிக்கவோ கூட வெளியே வர அனுமதி மறுக்கிறார்கள. மேலும் கும்பலாக அனைவரையும் சங்கிலியில் பிணைத்துகும்பலாக ஓடவிட்டு அடிக்கிறார்கள்.
இந்தக் காட்டுமிராண்டித்தனமான தண்டனைகளை அனுபவித்து வரும் தமிழர்களைக் காக்க வேண்டும். மாலத்தீவுசிறைகளில் தவித்து வரும் தமிழ் கைதிகளை காப்பாற்ற மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.எடுப்பீர்கள் என உளமாற நம்புகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications