மதுரையில் பேய் மழை !
மதுரை:
மதுரை நகரில் நேற்றிரவு கன மழை பெய்தது. இதனால் நகரின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
வட கிழக்கு பருவ மழை இன்னும் 3 நாட்களில் தொடங்கவுள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம்அறிவித்துள்ளது. அதற்குக் கட்டியம் கூறும் வகையில், மாநிலம் முழுவதிலும் கடந்த சில நாட்களாக கன மழைபெய்து வருகிறது.
மதுரை மாநகரில் நேற்று மாலை கன மழை பெய்தது. வரலாறு காணாத அளவுக்கு பெய்த இந்த மழை சுமார் 3மணி நேரம் மதுரை மக்களை பயமுறுத்தி விட்டது. கன மழை காரணமாக மதுரை நகரின் பல பகுதிகள் நீர்ழ்மூழ்கின.
பெரியார் பேருந்து நிலையம், யானைக்கல், புதுமண்டபம் உள்ளிட்ட நகரின் முக்கியமான பகுதிகளும் நீரில்மூழ்கின. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரவு 10 மணி வரையிலும் பல்வேறு சாலைகளிலும்வாகனங்கள் நின்றன.
மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. இதனால் கோவிலில் உள்ள பொற்றாமரைக்குளம் நிரம்பிவழிந்தது. இதுதவிர கோவிலுக்கு அருகில் உள்ள புது மண்டபத்திற்குள்ளும் மழை நீர் புகுந்து கடைகளை காலிசெய்து விட்டது.
கடைகளுக்குள் தண்ணீர் நிற்பதால் புத்தகக் கடைகள், பாத்திரக் கடைகள், தையல் கடைகள் பெரும் நஷ்டத்தைசந்தித்துள்ளன.
மதுரை தவிர சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றிரவு மழை பெய்தது. காஞ்சிபுரத்திலும் மிக நல்லமழை பெய்துள்ளது.
பருவ மழை தொடங்கும்:
இந் நிலையில் தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கிவிடும் என்று சென்னைவானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.
வட கிழக்குப் பருவ மழைக்காக தமிழகம் காத்துக் கிடக்கிறது. குறிப்பாக சென்னை நகர மக்கள் மழைக்காக தவமேஇருந்து வருகின்றனர்.
வட கிழக்குப் பருவ மழைக்கான அறிகுறிகள் ஆங்காங்கே தெரிய ஆரம்பித்துள்ளது. வட கிழக்குப் பருவக் காற்றுதிசை மாறி ஆந்திரா பக்கம் வீசுவதால், மழை தொடங்குவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வானிலைஆராய்ச்சி நிலையம் கூறுகிறது.
இருப்பினும் இன்னும் 3 நாட்களில் முழு அளவில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கி விடும் என்று கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் அதிகபட்சமாக 12 செமீ மழையும், பெரம்பூர், தர்மபுரி, குன்னூர் ஆகியஇடங்களில் தலா 3 செமீ மழையும் பெய்துள்ளது.
-
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்











Click it and Unblock the Notifications