தீபாவளி: போக்குவரத்து, மின்சாரம், உணவுத்துறை ஊழியர்களுக்கு 1 மாத ஊதியம் போனஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம், மின்வாரியம், உணவு சப்ளை துறை மற்றும் ஆவின் நிறுவனஊழியர்களுக்கு குறைந்தபட்ச போனஸான ஒரு மாத சம்பளம் (8.33 சதவீதம்) தீபாவளி போனஸாகவழங்கப்படவுள்ளது.

மின்வாரியம், உணவுத்துறை, அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாககுறைந்தபட்ச போனஸே வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் குறைந்தபட்ச போனஸான ஒருமாத சம்பளமே தீபாவளிப் போனஸாக வழங்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை செயலாளர் கற்பூர சுந்தரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில், போனஸ்பெறத் தகுதி வாய்ந்த சுமார் 1.25 லட்சம் ஊழியர்களுக்கு 8.33 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ரூ. 2500 போனஸாக வழங்கப்படும். இந்த போனஸ் குறித்துபோக்குவரத்துக் கழக ஊழியர்கள் பெரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் செ.குப்புசாமி கூறுகையில், இது கடும் ஏமாற்றத்தையே அளிக்கிறது.கடந்தஇரண்டு வருடங்களாக 20 சதவீத போனஸ் மற்றும் கருணைத் தொகையை கோரி வருகிறோம். ஆனால்குறைந்தபட்ச போனஸ் தொகையை மட்டுமே இந்த அரசு கொடுத்து வருவது மிகவும் வருத்தமளிக்கிறது என்றார்.

இதற்கிடையே அரசுக்கு தங்களது வருத்தத்தைத் தெரிவிப்பதற்காக சிஐடியூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்தஊழியர்கள் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.

துக்க தீபாவளி: தொழிற்சங்க தலைவர்

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு இந்த தீபாவளி துக்க தீபாவளியாக இருக்கும் என்று தமிழக அரசுப்போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சம்மேளனத்தின் துணைப் பொதுச் செயலாளர் சந்திரன் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், அரசின் அறிவிப்பு எங்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது. அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் ரூ. 140 கோடிக்கு மேல் லாபம் ஈட்டியுள்ளதாக சமீபத்தில்தான் போக்குவரத்து அமைச்சர் விஸ்வநாதன்கூறியிருந்தார்.

இந் நிலையில் தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், தன்னிச்சையாக அரசு அறிவித்துள்ளபோனஸ் எங்களுக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு இதுதுக்க தீபாவளியாகும் என்றார்.

மற்ற அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் கிடையாது. அவர்களுக்கு தீபாவளி முன்பணம் ரூ. 1,000 மட்டும்வழங்கப்பட்டு சம்பளத்தில் மாதாமாதம் பிடித்தம் செய்யப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+