மணிசங்கர அய்யர் ஒரு பச்சோந்தி: அமைச்சர் ஜீவானந்தம் கண்டுபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மணிசங்கர அய்யர் பச்சோந்தி போல செயல்படுகிறார் என்று தமிழக விவசாயத்துறை அமைச்சர் ஜீவானந்தம்கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நாகை அரசு விழாவுக்குப் பின்னர் தமிழக அரசிடம் பாதுகாப்புகேட்க மாட்டேன் என்று வீராவேசம் பேசிய மணிசங்கர அய்யர், அடுத்த 48 மணி நேரத்திலேயே பல்டி அடித்து ,தனக்கு பாதுகாப்பு தருமாறு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதன் மூலம் தான் ஒரு உண்மையான காங்கிரஸ்காரர் என்பதை நிரூபித்துவிட்டார். பத்திரிக்கைகளில் வீரர் போலபேட்டியளித்தார். ராஜிவ் காந்தி போல வீர மரணம் தழுவத் தயார் என்றும் பத்திரிக்கைகளில் சொன்ன மணிசங்கரஅய்யர் இப்போது அரசிடம் பாதுகாப்பு கேட்கிறார்.

மணிசங்கர அய்யருக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்கும். மணிசங்கர அய்யர் இப்படி மாறி மாறிப்பேசுவதன் மூலம் தான் ஒரு உண்மையான காங்கிரஸ்காரர்தான் என்று நிரூபிப்பதாக என்று கூறியுள்ளார்ஜீவானந்தம்.

காளிமுத்துக்கு நா கூச்சம்:

முதலமைச்சர் ஜெயலலிதாவை தகாத வார்த்தைகளால் திட்டியதற்காக மணிசங்கர ஐயர் மன்னிப்பு கேட்க வேண்டும்என்று சட்டசபை சபாநாயகர் காளிமுத்து கூறினார்.

மதுரையில் நிருபர்களிடம் காளிமுத்து கூறியதாவது: நாகை விழாவில் அய்யர் நடந்து கொண்ட முறைகேவலமானது. கண்டிக்கத்தக்கது. விழா தொடங்கியதிலிருந்து முடியும் வரை, இருந்தவன் என்ற முறையில்நடந்தவை என்ன என்பது எனக்குத் தெரியும்.

மணிசங்கர அய்யர், தொகுதி தொடர்பான விண்ணப்பங்களை சொல்லிவிட்டு அது தொடர்பாக நான் எழுதிவைத்ததை முதல்வரிடம் தருகிறேன் என்று கூறி கொடுத்தார். முதல்வர் அதைக் கனிவோடு வாங்கிக் கொண்டார்.

மேடையில் பேசிய முதல்வர் கோவிலுக்கு யானை தந்தது பற்றி அய்யர் எழுதியதைக்குறிப்பிட்டாரே தவிர மனம்புண்படும்படி வேறு எதுவும் பேச வில்லை.

ஆனால் மணிசங்கர அய்யரோ நாகூசும் வார்த்தைகளால் முதல்வரைத் தாக்கிப் பேசினார். இதையடுத்து அதிமுகஎம்.பி. காமராஜ் அய்யர் என்று கத்தினார். உடனே அவரை அமைதிப்படுத்திய முதல்வர், இப்படித்தான் கத்துவதாஎன்று கடித்து கொண்டார்.

இதையடுத்து கீழிறங்கிச் சென்று விட்டார் அய்யர். அய்யரின் செயலைப் பார்த்து நான் திகைத்துப் போனேன்.அய்யர் பேசிய பேச்சுக்கள் நா கூச்சம் தருபவை. பத்திரிக்கைகளில் எழுத முடியாதவை. வெளியில் சொல்லமுடியாதவை.

இதற்காக மணிசங்கர அய்யர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். முதல்வர் என்னைத் தாக்க தூண்டி விட்டார்என்று அவர் சொல்வது அபாண்டம் என்றார் காளிமுத்து.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+