அய்யர் மீதான தாக்குதலால் காங்கிரஸ் கோஷ்டிகளை ஒன்றாக்கிய ஜெயலலிதா !
சென்னை:
மணிசங்கர அய்யர் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த கண்டனக் கூட்டத்தில்அதிமுகவுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மயிலாடுதுரை எம்.பி.மணிசங்கர் அய்யர் மீது காரைக்கால் அருகே நடந்த தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும்வகையில், சென்னையில் காங்கிரஸ் சார்பில் கண்டனக் கூட்டம் நடந்தது. இதில் அனைத்துக் கோஷ்டிகளையும்சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அகில இந்திய செயலாளர் ஜி.கே.வாசன் பேசுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதிக்கேபாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழகத்தில் எழுந்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுதவிரசோனியா காந்தியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். இதையும் காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறதுஎன்றார்.
செயல் தலைவர் இளங்கோவன் கூறுகையில், ஜெயலலிதாவுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்ததாக்குதலின் மூலம் காங்கிரஸாரிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி விட்டார் ஜெயலலிதா. அவரது போக்கிற்கு முடிவுகட்டும் நாள் நெருங்கி விட்டது. அதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்றார்.
ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர் என்று கருதப்படும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சனநாச்சியப்பன் பேசுகையில், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தால்அதை காங்கிரஸ் கட்சி முழுமையாக ஆதரிக்கும் என்றார்.
மணிசங்கர அய்யர் பேசுகையில், மேடையில் நான் அசிங்கமாக திட்டியதாக கூறுகிறார் ஜெயலலிதா.அப்படியானால் நான் என்ன கூறினேன் என்பதை மக்களுக்கு ஜெயலலிதா தெரிவிக்க வேண்டும். இதில் ரகசியம்காக்கத் தேவையில்லை என்றார்.
கூட்டத்தில் கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், குமரி அனந்தன், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடிஆதித்தன், யசோதா, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர். காங்கிரஸின் அனைத்துப் பிரிவுதலைவர்களும் ஒரே மேடையில், ஒரே குரலில் முழங்கியது, அதிமுகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஒற்றுமையுடன்திரண்டுள்ளதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications