மாநில அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி (டியர்னஸ் அலவன்ஸ்) உயர்வு வழங்க அரசுதிட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் போதெல்லாம் மாநில அரசுஊழியர்களுக்கும் உயர்வு அளிக்கப்படும். ஆனால், கடந்த ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வை தமிழக அரசுவழங்கவில்லை. இதனால் இரு ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு நிலுவையில் உள்ளது.

இந் நிலையில் சமீபத்தில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்தது.

இதனால் மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அதை அமலாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.தீபாவளியையொட்டி 3 சதவீத உயர்வை அறிவிக்க மாநில அரசு இது தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவு இன்றுமாலை அல்லது நாளைக்குள் வெளியாகலாம்.

இந்த மாதத்திலிருந்து உயர்வு அமல்படுத்தப்படும். நவம்பர் மாத சம்பளத்துடன் இந்த ஊதிய உயர்வைப்பெறலாம். இதனால், ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 75 முதல் அதிகபட்சம் ரூ. 1000 வரை ஊதிய உயர்வுகிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+