வழக்கம்போல பாப்பாபட்டி பஞ்சாயத்துத் தலைவர் ராஜினாமா!
உசிலம்பட்டி:
| பாப்பாபட்டி தலித் பஞ்சாயத்துக்கு மீண்டும் தலைவர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய தலைவராகபதவியேற்ற அழகர்சாமி, அடுத்த நிமிடமே தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து விட்டார். |
இங்குள்ள பெரும்பான்மை சமூகத்தினராந தேவர் இனத்தினர், தலித் பிரதிநிதியை தங்களது தலைவராக ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றனர். இந் நிலையில் கடந்த 9ம் தேதி பாப்பாபட்டியில் தேர்தல் நடந்தது. ஊர் மக்கள்சார்பில் நிறுத்தப்பட்ட அழகர்சாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். மற்ற தலித் தொகுதிகளில் யாரும்போட்டியிடவே இல்லை.
பாப்பாபட்டியில் வெற்றி பெற்ற அழகர்சாமி நேற்று புதிய தலைவராகப் பதவியேற்றார். அவரதுபதவியேற்பையொட்டி ஏராளமான ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். ஊராட்சிஅலுவலகத்தில் பதவியேற்ற அழகரிசாமி, அடுத்த நிமிடமே தனது ராஜினாமா கடிதத்தை அதிகாரிகளிடம்கொடுத்தார். ஆனால், செல்லம்பட்டி யூனியன் ஆணையர் ஜெகந்நாதன் அதை வாங்க மறுத்து விட்டார்.
இதையடுத்து வெளியே வந்த அழகர்சாமி, தபால் மூலம் அதை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். தனதுகடிதத்தில் மேல் ஜாதியினரின் பொறாமை காரணமாக பதவி விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மேல்ஜாதியினர் என்று அவர் தலித்களான பறையர் மற்றும் பள்ளர் ஜாதியினரைக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது கடித விவரம்: நான் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவன். என்னைவிட மேலா ஜாதியினரான பறையர்மற்றும் பள்ளர் இனத்தவர் இந்தத் தேர்தலில் என்னை எதிர்த்துப் போட்டியிட்டனர். அவர்கள்தோல்வியடைந்துவிட்டனர். இதனால் அவர்கள் என் மீது பொறாமையுடன் உள்ளனர். இதன் காரணமாக எனதுபதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
தேவர் சமூகத்தினரின் எதிர்ப்பு காரணமாகவே அவர் பதவி விலகியிருந்தாலும் கூட அதை வெளியில் சொன்னால்,அழகர்சாமியின் குடும்பம் அந்த ஊரில் வாழ முடியாது என்ற சூழல் உருவாகும் என்பதால் தலித் வகுப்பைச் சேர்ந்தமற்ற இனத்தினரின் பொறாமை காரணமாகவே பதவி விலகுவதாகக் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதனால் பாப்பாபட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவி மீண்டும் காலியாகியுள்ளது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட்













Click it and Unblock the Notifications