மதவெறியை தூண்டும் பேச்சு: ராமகோபாலன் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் மீது விசாரணை நடத்தி, அவர் மதவெறியைத் தூண்டுமாறுபேசியிருந்தால் வழக்குப் பதிவு செய்யுமாறு கும்பகோணம் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக தலைவர் ஹைதர் அலி மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், கடந்த மார்ச் 30ம் தேதி கும்பகோணத்தில் ஒரு கூட்டத்தில் இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவமக்களிடையே மத குரோதத்தைத் தூண்டும் வகையில் ராமகோபாலன் பேசினார்.
மதங்களுக்கிடையே பிரச்சினையை உருவாக்கும் எண்ணத்திலும், மோதல்களைத் தூண்டும் நோக்கத்திலுமேஅவ்வாறு பேசினார் ராமகோபாலன்.
சிறுபான்மை மக்கள் மீது பெரும்பான்மை சமூகத்தினர் குரோதம் கொள்ள வேண்டும் என்பதே அவரதுநோக்கமாக இருந்தது. எனவே ராமகோபாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், ராமகோபாலன் மீது வழக்குப் பதிவு செய்ய கும்பகோணம் நகரடி.எஸ்.பி.க்கு உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக முழு விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்யுமாறும் உத்தரவு பிறப்பித்தார்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications