யாரையோ திருப்திப்படுத்தவே ஜனனி மீது வழக்கு: கபில் சிபல் வாதம்
சென்னை:
ஜனனி மீது போடப்பட்டுள்ள கஞ்சா வழக்கு திட்டமிட்ட சதி. யாரையோ திருப்திப்படுத்துவதற்காக இந்த பொய்வழக்கை போலீஸார் புனைந்துள்ளனர் என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் சென்னை உயர்நீதிமன்றத்தில்வாதாடினார்.
நடராஜனின் தோழியான மதுரை இளம் பெண் ஜனனி, அவரது தாயார் ரெமீஜா, இவர்களது கார் டிரைவர் சதீஷ்ஆகியோர் மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 3 பேரும் திருச்சி சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி 3 பேரின் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஜனனியின் சார்பில் பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகியுள்ளார்.நீதிமன்றத்தில் நீதிபதி கற்பகவிநாயகம் முன்பு ஆஜராகி வாதாடிய கபில் சிபல், போலீஸாரைக் கடுமையாகக் குற்றம்சாட்டினார்.
போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் படி, வணிக ரீதியில் 20 கிலோவுக்கு மேலான பொருட்களை இருப்புவைத்துக் கொள்ள அனுமதி உள்ளது. அதற்குக் கீழே இருப்பு வைத்தால் அது சட்டப்படி குற்றமாகும்.
எனவேதான், ஜனனியின் சென்னை நீலாங்கரை வீட்டிலும், மதுரையிலுள்ள வீட்டிலும் , ஜனனியின் காரிலும்கஞ்சாவை பிரித்து போட்டுள்ளனர். யாரையோ திருப்திப்படுத்துவதற்காக இவ்வாறு செய்துள்ளனர் போலீஸார்.
ஜூலை 11ம் தேதி போலீஸார் தாக்கல் செய்த கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த மகஜரில், எத்தனை கிலோகஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது என்ற தகவல் இல்லை. ஆனால் முதல் தகவல் அறிக்கையில், சாக்குப் பையில் 15கிலோ கஞ்சாவும், இன்னொரு பையில் 5 கிலோ கஞ்சாவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ரிமான்ட்அறிக்கையில், 15 கிலோ கஞ்சா என்று கூறப்பட்டுள்ளது.
இந்த முரண்பாடு குறித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜனனியின் வக்கீல் சுட்டிக்காட்டியபோது, இது சாதாரண தவறுதான், பெரிதுபடுத்தத் தேவையில்லை என்று அரசுத் தரப்பு வக்கீல்கூறியுள்ளார். ஆனால் இது திட்டமிட்ட, பொய் வழக்கு என்று நான் ஆணித்தரமாகக் கூறுகிறேன்.
மனுதாரர்கள் 108 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். சாட்சியங்களை சமர்ப்பிக்க வேண்டியதுபோலீஸாரின் கடமை. 108 நாட்களாகியும் போலீஸாரால் சாட்சியங்களை சமர்ப்பிக்க முடியவில்லை,விசாரணையை முடிக்க முடியவில்லை என்றால் அது யாருடைய குற்றம்?
ஜனனியிடமிருந்து சில செல் போன்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். ஆனால் அதில் இருந்த எண்கள் என்னஎன்பது குறித்து அவர்கள் பரிசோதனை செய்தார்களா என்பது தெரியவில்லை என்றார் சிபல்.
கபில் சிபலின் வாதத்திற்குப் பதில் அளிக்க அரசு வக்கீல் அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து, வழக்குவிசாரணையை வரும் 27ம் தேதிக்கு நீதிபதி கற்பகவிநாயகம் ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications