நான் ஒரு புரட்சி தீ: தனக்கு தானே ஜெயலலிதா பாராட்டு
விருதுநகர்:
கோபாலபுரத்தில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட், தவறுதலாக நாகப்பட்டனத்தில் விழுந்து, பின்னர்கோபாலபுரத்திற்கே மீண்டும் திரும்பி விட்டதாக மணிசங்கர் அய்யர் மீதான தாக்குதல் குறித்து ம முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் துவக்கி வைத்த முதல்வர்ஜெயலலிதா பேசியதாவது:
மணிசங்கர் அய்யர் மீதான தாக்குதலில் அதிமுகவுக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதில் எந்த உண்மையும்இல்லை. கோபாலாபுரத்திலிருந்து ஏவப்பட்ட ராக்கெட், தவறுதலாக நாகையில் விழுந்து விட்டது. அது இப்போதுகோபாலபுரத்திற்கே திரும்பி விட்டது.
அந்த ராக்கெட் சிவகாசியில் செய்யப்பட்டதாக இருக்காது என்றே நான் கருதுகிறேன். சிவகாசி ராக்கெட்டாகஇருந்திருந்தால் குறி தப்பியிருக்க வாய்ப்பில்லையே. போலி பட்டாசுகளுக்கு நான் அஞ்ச மாட்டேன். ஏனென்றால்நான் எம்.ஜி.ஆர். பாசறையில் உருவான புரட்சித் தீ.
காமராஜர், குமாரசாமி ராஜா போன்ற பெரும் தலைவர்களை நாட்டுக்குக் கொடுத்த மாவட்டம் விருதுநகர். சிறந்தபாரம்பரியத்தைக் கொண்ட விருதுநகர் மாவட்டத்திற்கு மேலும் மணி மகுடமாக, தமிழக அரசின் சின்னமாக,ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் விளங்குவது நினைவு கூறத்தக்கது என்றார் ஜெயலலிதா.
பண்ணையாரின் எண்கெளன்டர் சாவைத் தொடர்ந்து நாடார் அமைப்புகள் கறுப்புக் கொடி காட்டிவிடலாம் என்றுஅஞ்சிய போலீசார் நிகழ்ச்சிக்கு போலீஸார் பலத்த பாதுகாப்பு கொடுத்திருந்தனர்.
திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்த ஜெயலலிதா, பல லட்சம் மதிப்புள்ள நலத் திட்ட உதவிகளையும்,பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் காளிமுத்து, அமைச்சர்கள் வளர்மதி, இன்பத் தமிழன், ஆட்சித் தலைவர் முகம்மது அஸ்லம்ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின் மாலை 3.30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் மதுரை கிளம்பிய ஜெயலலிதா அங்கிருந்துசிறப்பு விமானத்தில் சென்னை திரும்பினார்.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications