பாகிஸ்தானுடன் மீண்டும் கிரிக்கெட்: இந்தியா புதிய அமைதி முயற்சி
டெல்லி:
பாகிஸ்தானுடன் சுமுக உறவை ஏற்படுத்தும் விதமாக மீண்டும் தனது நட்புக் கரத்தை நீட்டியுள்ளது இந்தியா.
மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகளைத் துவங்குவது உள்பட 12 அம்ச சமரசத்திட்டத்தை இந்தியா முன் மொழிந்துள்ளது.
பிரதமர் தலைமையில் தேசிய பாதுகாப்பு தொடர்பான மூத்த அமைச்சர்களின் கூட்டம் நடந்தது. அதன் பின்செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா இதனைத் தெரிவித்தார்.அவரது பேட்டி விவரம்:
காஷ்மீர் விவகாரம் குறித்து துணைப் பிரதமர் அத்வானி ஹூரியத் மாநாடு அமைப்பின் பிரதிநிதியானஅன்சாரியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
ஸ்ரீநகருக்கும்,பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரிலுள்ள முஷாபராபாத்திற்கும் இடையே பஸ் போக்குவரத்தைஏற்படுத்துவதிலும், இரு நாடுகளுக்கும் இடையேயான விளையாட்டுத் தொடர்புகளை மீண்டும் தொடர்வதிலும்இந்தியா ஆர்வமாக உள்ளது.
மேலும் 20 பாகிஸ்தானிய சிறுவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை தரவும் இந்தியா தயார். இந்தியா- பாகிஸ்தான்அணிகளுக்கு இடையே மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை நடத்தவும் தயார்.
மீனவர்கள் கைது செய்யப்படுவதை பரஸ்பரம் இரு நாடுகளும் தவிர்க்கவும், கடலோரப் பகுதிகளில் இரு நாட்டுக்கடலோரப் படையினரும் தகவல் பரிமாறிக் கொள்ளவும், மும்பை மற்றும் கராச்சி இடையே படகுப்போக்குவரத்தை தொடங்கவும் இந்தியா தயாராக உள்ளது.
அதே நேரத்தில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போர் தொடரும் என்றார் சின்ஹா.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications