சாலையோர தீபாவளி கடைகளுக்கு தடை: மதுரையில் பதற்றம்
மதுரை:
தீபாவளிக்கு முந்தைய தினமான இன்று இரவில் மதுரை நகரின் முக்கிய பகுதிகளில் சாலையோரங்களில்போடப்படும் சிறு கடைகளுக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர். இது மதுரை மக்களிடையே பெரும்அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளிப் பண்டிகையையொட்டி மதுரை நகரின் முக்கியப் பகுதிகளான விளக்குத்தூண், காமராஜர் சாலை,அம்மன் சன்னதி, கோரிப்பாளையம் போன்ற இடங்களில் சாலையோரங்களில் சிறு கடைகள் போடப்படுவதுவழக்கம்.தீபாவளிக்கு முதல் நாள் இரவு முழுவதும் இந்தக் கடைகளில் விடிய விடிய வியாபாரம் நடக்கும். ஜட்டி, பனியனில்ஆரம்பித்து துண்டு, சாக்ஸ், குடை, கண்ணாடிப் பொருள்கள், பட்டாசுகள், வளையல், கைலி, சேலை வரைபலதரப்பட்ட பொருள்கள் குறைந்த விலையில் விற்கப்படும்.இரவு ஆக, ஆக விலை குறையும். இதனால் இரவு ஆக, ஆக கூட்டமும் பெருகும். ஜெகஜோதியாய் திருவிழாமாதிரி கூட்டம் கூடி பரபரப்பான விற்பனை நடக்கும்.மதுரை மக்கள் மட்டுமல்லாது சுற்றுப்பட்டைச் சேர்ந்த வெளியூர் மக்களும் வந்து பொருள்களை அள்ளிச் செல்வதுவழக்கம். மதுரையைப் பொறுத்தவரை இந்த பஜார், தீபாவளியின் மிக முக்கிய அங்கம்.கடைசி நேரத்தில் துணி வாங்குபவர்கள். குறைந்த விலையில் பொருள்கள் வாங்க வருபவர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும்.மதுரை நகர வாலிபர்கள் இந்தப் பகுதிகளில் இரவு முழுவதும் சுற்றியலைவார்கள். அதிகாலையில் வீடு திரும்பிதீபாவளியைக் கொண்டாடுவார்கள்.ஆனால், இந்த ஆண்டு இதற்கு போலீஸார் தடை போட்டு விட்டார்கள். இதனால் மதுரை மக்கள் பெரும்அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். சிறு வியாபாகரிளும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.போலீஸார் இந்த தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று கோரி, வியாபாரிகள் தங்களது பொருட்களுடன்மதுரையில் குவிந்தவண்ணம் உள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications