தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க அரசு கடும் கட்டுப்பாடு
சென்னை:
தீபாவளியின்போது பட்டாசுகள் வெடிக்க கடுமையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
ஹைட்ரஜன் குண்டு, அணுகுண்டு போன்ற அதிக ஓசை எழுப்பும் வெடிகளை வெடித்தால் ஒலிக் கருவிகள் மூலம்டெசிபல் (ஒலியின் அளவு)அளக்கப்பட்டு கடும் தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஒலி, மாசு இல்லாத தீபாவளி கொண்டாட அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாக தமிழக வனம்மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது
அதிக ஓசை எழுப்பும் வெடிகளினால் தற்காலிக செவிட்டுத்தன்மையும், தீக்காயங்களும் ஏற்படுகின்றன. அரசின்நடவடிக்கையால் 2001ம் ஆண்டை விட 2002ம் ஆண்டு தீபாவளியின்போது 10-20 டெசிபல் வரை ஒலி மாசுகுறைக்கப்பட்டது.
இந்த ஆண்டு 125 டெசிபலுக்கு மேல் சத்தம் எழுப்பும் வெடிகளை வெடிக்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கைஎடுக்கப்படும். இந்த தீபாவளியை ஒலி மாசில்லாமலும், விபத்தில்லாமலும் கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணிவரை பட்டாசுகளை வெடிக்காமல் இருப்பதைக் கண்காணிக்கவிழிப்புணர்ச்சிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் ஒலி மாசு குறித்து வாகனங்களில் சென்றுபிரசாரம் செய்து வருகின்றனர்.
இது தவிர ஒலி அளக்கும் கருவிகள் மூலம் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிப்போரைக் கண்டுபிடிக்கவும்நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளோம். மாவட்ட கலெக்டர்களுக்கு ஒலி அளக்கும் கருவிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அதிக ஒலி எழுப்பும் லட்சுமி வெடி, மயில் வெடி, நேதாஜி வெடி, ஹைட்ரஜன் குண்டு, அணு குண்டு, டைனமிக்வெடி, புல்லட் வெடி, கிளாசிக் குண்டு, கிருஷ்ணா வெடி, ஜம்போ வெடி, குதிரை வெடி, கிளி வெடி போன்றமரூன்ஸ் வெடிகள், எலக்ட்ரிக் வெடிகள், தொடர் சரவெடிகள், 10 ஆயிரம் வாலா வெடிகளை வெடிப்பவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.நல்ல முயற்சி எடுத்த தமிழக அரசுக்கு ஒரு ஜே!
-
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications