மைசூர்- பெங்களூர் ரயில் தடம் புரண்டு 4 பெண்கள் பலி: 53 பேர் படுகாயம்
பெங்களூர்:
மைசூரில் இருந்து பெங்களூர் வந்து கொண்டிருந்த ரயில் இன்று காலை தடம்புரண்டதில் 4 பயணிகள்பலியாயினர். மேலும் 53 பேர் படுகாயமடைந்தனர். மேலும் 2 பயணிகளைக் காணவில்லை.
மாண்டியா மாவட்டம் பலஹள்ளி என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது.
தினமும் காலை 6.00 மணிக்கு மைசூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் 9.30 மணிக்கு பெங்களூர் வந்து சேரும்.இன்று பலஹள்ளி அருகே வந்தபோது இந்த ரயிலின் கடைசி 4 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டுகவிழ்ந்தன. அருகாமையில் உள்ள வயல் வெளியில் அவை உருண்டு விழுந்தன.
இதில் 4 பெண்கள் பேர் உடல் நசுங்கி பலியாயினர். அவர்களது விவரம்: சையத் தஹ்சீனா, ஹசீனா, பிரபா மணி,சுமா.
மேலும் 53 பேர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த 13 பேர் மைசூர் கே.ஆர். மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர். முதலில் 5 பேர் இறந்ததாகத் தகவல் வந்தது. ஆனால், இறந்தவர்கள் எண்ணிக்கை 4 தான்என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு பெட்டியில் பிரேக் டிஸ்க் உடைந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. இது குறித்து முழுவிசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பெங்களூரில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த ரயில்வே அமைச்சர் நிதிஷ்குமார், விபத்து குறித்து அறிந்து சம்பவஇடத்துக்கு விரைந்தார். மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. சம்பவ இடத்திலிருந்து பயணிகளை பெங்களூர்அழைத்து வர சிறப்பு ரயிலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
சில பயணிகளைக் காணவில்லை. இவர்கள் விபத்தில உயிர் தப்பி அங்கிருந்து தாங்களாகவே வீடுகளுக்குப்புறப்பட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த விபத்தையடுத்து மைசூர்- பெங்களூர் இடையிலான 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 8ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications