10-வது படித்திருந்தால் பி.இ. சீட்!
சென்னை:
ஈரோட்டைச் சேர்ந்த ஒரு பொறியியல் கல்லூரி, எஸ்.எஸ்.எல்.சி. படித்திருந்தாலே பி.இ. படிப்பில் சேரலாம் எனஅதிரடியாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யு.ஜி.சி.) அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமிகடிதம் எழுதி, அந்தக் கல்லூரி மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.
ஈரோட்டைச் சேர்ந்த அந்தக் கல்லூரி, ராஜஸ்தானைச் சேர்ந்த நிகர் நிலைப் பல்கலைக்கழகம் ஒன்றுடன் இணைந்துஇந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பத்தாவது படித்திருந்தால், பி.இ. படிப்பில் சேரலாம் என்று பத்திரிக்கை விளம்பரமு வெளியிட்டுள்ளது. மேலும்,வனவியல் மற்றும் கட்டடக் கலை ஆகிய படிப்புகளிலும் பத்தாவது படித்தவர்கள் சேரலாம் என்றும் அந்தக்கல்லூரியின் விளம்பரம் கூறுகிறது.
அந்தக் கல்லூரி, ராஜஸ்தான் மாநில பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதன் மீது நடவடிக்கைஎடுக்க முடியாத நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது.
இதையடுத்து யு.ஜி.சிக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி அவசரக் கடிதம் அனுப்பியுள்ளார்.
பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் அருண் நகவேகருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நாட்டின் உயர்ககல்வியை சீர் குலைக்கும் ராஜஸ்தான் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறுகோரியுள்ளார்.
ஈரோடு கல்லூரியின் மீது தமிழக அரசு மூலம் நடவடிக்கை எடுக்க வைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுளளார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications