ஜெ. ஆட்சியில் தமிழ் புறக்கணிப்பு: கருணாநிதி வருத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதா ஆட்சியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி வருத்தம்தெரிவித்துள்ளார்.

முரசொலியில் திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், டிசம்பர் 1ம் தேதி நடக்கவுள்ள சிறை நிரப்பும்போராட்டத்தின்போது, தமிழை தேசிய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையைவலியுறுத்தப் போகிறோம்.

இந்த ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்தது. அதில் 2003-04ம் ஆண்டு முதல்முதலாவது வகுப்பிலிருந்து அறிவியல் தமிழ் பாடம் அறிமுகப்படுத்தப்படும். படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும்ஒவ்வொரு வகுப்பாக இது அறிமுகப்படுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை முதலாவதுவகுப்பில் அறிவியல் தமிழ் பாடம் அறிமுகமாகவில்லை.

பாதிக் கல்வியாண்டு முடியப் போகும் நிலையில் தமிழகத்தின் எந்தப் பள்ளியிலும், அறிவியல் தமிழ்அறிமுகப்படுத்தப்பட்டதாக செய்தியே இல்லை.

அதேபோல அனைத்து வகுப்பிலும் தமிழ் கட்டாய பாடமாக்கப்படும் என்று அதிமுக அரசு கூறியது. அதையும்அரசு இன்னும் அமல்படுத்தவில்லை. மொத்தத்தில், இந்த ஆட்சியில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது,அவமானப்படுத்தப்படுகிறது என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் கருணாநிதி.

அரசுக்கு கோரிக்கை:

இந் நிலையில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில் தனித்தனி பாடத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.இதில் அரசுப் பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் ஆகிய மூன்று வகைப் பள்ளிகளில் தான் மாநிலஅரசின் பாடத் திட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

ஆங்கல மொழி மீது ஏற்பட்ட மோகம் மற்றும் வேலைவாய்ப்பு கிட்டும் என்ற எண்ணத்தில் மெட்ரிகுலேஷன்பள்ளிகளில் பெற்றோர் தம் பிள்ளைகளைச் சேர்ப்பதால் அவற்றின் எண்ணிக்கை 1,450 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த கல்வியாண்டு விவரப்படி,மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 14,51,000 மாணவர்களும், மத்திய அரசுப்பள்ளிகளில் 1,16,000 மாணவர்களும், ஆங்கிலோ இந்திய பள்ளிகளில் 54,000 பேரும் படிக்கின்றனர். ஆகமாணவர்களின் மொத்த எண்ணிக்கை 1,25,63,000 ஆக உள்ளது.

இதில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 1,09,42,000. ஆங்கிலத்தை பயிற்றுமொழியாகக் கொண்டுள்ள மாணவர்களின் எண்ணிககை 16,21,000.

இந்த 16 லட்சம் மாணவர்களும் தமிழறிவு பெற வேண்டும் என்பதற்காக திமுக ஆட்சியில் தமிழ் பயிற்று மொழிஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து பல சங்கங்கள் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன. உயர் நீதிமன்றமும் அரசின் உத்தரவைரத்து செய்தது. கல்வி கற்பது அடிப்படை உரிமை. பயிற்று மொழியைத் தேர்ந்தெடுப்பதும் அதில் அடங்கும்.பிள்ளைகளுக்காக அதைத் தேர்வு செய்யும் உரிமை பெற்றோருக்கு உண்டு என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்தத் தீர்ப்பை எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் இருந்தபோதே தமிழகத்தில்ஆட்சி மாற்றம் நடந்து விட்டது. எனவே, இந்த வழக்கில் ஒரு நல்ல தீர்ப்பை பெற அதிமுக அரசு விரைந்துசெயல்பட வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+