ஜெயலலிதா தஞ்சை பயணம்: கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது
தஞ்சாவூர்:
நலத் திட்டப் பணிகளைத் துவக்கி வைக்க இன்று தஞ்சாவூர் வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கறுப்புக் கொடிகாட்டுவதற்காக திரண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திருச்சி செல்லும் ஜெயலலிதா அங்கிருந்து, ஹெலிகாப்டரில் தஞ்சைசெல்கிறார்.
அங்கு குந்தவை நாச்சியார் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்கும் ஜெயலலிதா,அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.
கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரைப் பெற்றுத் தவறியதாகக் கூறி ஜெயலலிதாவுக்கு கறுப்புக் கொடி காட்டபல்வேறு விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. இதனால் தஞ்சாவூரில் ஆயிரக்கணக்கான போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இன்று காலை தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம்ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தஞ்சை பனகல் கட்டடத்திலிருந்து கறுப்புக்கொடிகளுடன் பேரணியாக கிளம்ப முயன்றனர். அப்போது அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார்அனைவரையும் கைது செய்தனர்.
இதற்கிடையே தங்களது வீடுகளில் கறுப்புக் கொடிகளை ஏற்றவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். அதைத் தடுக்கபோலீசாரும் அதிமுகவினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications