ஜெ. நியூஸ் சேனலுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை?
சென்னை:
பாரதீய ஜனதாக் கட்சியின் முன்னாள் தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தியின் மகள் திருமண வரவேற்பில் துணைப்பிரதமர் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
பொடா சட்ட விவகாரத்தில் தன்னை மத்திய அரசு கைவிட்டுவிட்டதாகக் கருதும் முதல்வர் ஜெயலலிதா,அத்வானியை சந்திக்கவில்லை.
ஜனா. கிருஷ்ணமூர்த்தியின் மகள் சுபலட்சுமிக்கும், லட்சுமி நாராயண் பிரசாத்துக்கும் இன்று திருமணம் நடக்கிறது.இவர்களது திருமண வரவேற்பு நேற்று மாலை சென்னையில் நடந்தது. இதில் அத்வானி கலந்து கொண்டார். இரவு7 மணியளவில் திருமண மண்டபத்தை அடைந்த அத்வானி, மணமக்களை வாழ்த்தினார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் திருநாவுக்கரசர், சங் பியா கெளதம், வெங்கையா நாயுடுமற்றும் ஆளுநர்கள் ராம் மோகன் ராவ், சிக்கந்தர் பக்த், டி.என்.சதுர்வேதி, ராமா ராவ், என்.என்.ஜாஉள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
சென்னை வரும் அத்வானியை முதல்வர் ஜெயலலிதா சந்திப்பார் என்று கருதப்பட்டது. ஆனால், பொடாவிவகாரத்திலும் ஜெயா நியூஸ் சேனல் தொடங்க அனுமதி அளிப்பதிலும் ஜெயலலிதாவுக்கும் மத்திய அரசுக்கும்இடையே நேரடி மோதல் எழுந்துள்ளதால் அவரை ஜெயலலிதா சந்திக்கவில்லை.
சன் நியூஸ் சேனலைப் போலவே, ஜெயா டிவியின் சார்பில் 24 மணி நேர நியூஸ் சேனல் துவங்க ஜெயலலிதாதிட்டமிட்டுள்ளார். இதற்கு அனுமதி கோரி மத்திய அரசுக்கு ஜெயா டிவி நிர்வாகம் கடிதங்கள் அனுப்பியது.
தகவல்- ஒளிபரப்புத்துறையும், விண்வெளித்துறையும் இதற்கு அனுமதி அளித்துவிட்டன. ஆனால்,அத்வானியிடம் உள்ள உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்காமல் இருந்து வருகிறது.
இதற்குக் காரணமாக டிடிவி தினகரனை சுட்டிக் காட்டுகிறார்கள் டெல்லி அதிகாரிகள். பெரியகுளம் எம்.பியானஇவர் தான் ஜெயா டிவியின் இயக்குனர். இவர் மீது அன்னிய செலாவணி வழக்கு நிலுவையில் உள்ளதால் நியூஸ்சேனல் தொடங்க அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் அத்வானியிடம் சுட்டிக் காட்டிவிட்டதாகத் தெரிகிறது.
மேலும் தினகரனின் நிதி மோசடி வழக்குக விசாரித்து வரும் நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள என்போர்மென்ட்டைரக்டரேடும் (அமலாக்கப் பிரிவு) இந்த சேனலுக்கு அனுமதி தரக் கூடாது என திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகத்தெரிகிறது. இந்த விஷயத்தில் கடுமையான நோட்டையும் அமலாக்கப் பிரிவு அனுப்பிவிட்டது.
இதையடுத்து ஜெயா நியூஸ் டிவி தொடர்பான பைலை உள்துறை அமைச்சகம் மூடி வைத்துவிட்டது. இது குறித்துநிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடமே முதல்வர் பேசியதாகவும் ஆனால், அமலாக்கப் பிரிவின் கடுமையானவிமர்சனத்தையும் மீறி எதுவும் செய்ய முடியாது என அவரும் கை விரித்துவிட்டார் என்கிறார்கள்.
இந் நிலையில் தான் அத்வானி சென்னை வந்தார். ஏற்கனவே, திமுகவுக்கு சாதகமாக பொடா சட்டத்தைத் திருத்தமத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கோபத்தில் உள்ள முதல்வருக்கு, ஜெயா நியூஸ் சேனல் தொடர்பானவிவகாரமும் எரிச்சல் தர அத்வானியை அவர் சந்திக்கவில்லை.
அத்வானியை ஜெயலலிதா சந்திக்க வருவார் என்று நினைத்து அத்வானி தங்கியிருந்த ஹோட்டலில் நிருபர்கள்குவிந்திருந்தனர். பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications