ரூ. 17 கோடி மோசடி: ஹட்கோ அதிகாரியின் வங்கி லாக்கர்களை சோதனையிட சிபிஐ முடிவு
சென்னை:
சென்னையில் தனியார் வீட்டு வசதி நிறுவனத்திற்கு ரூ. 17 கோடி கடன் வழங்கியதில் நடந்த முறைகேடுதொடர்பாக, ஹட்கோ உயர் அதிகாரியான அருண்குமார் விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐசம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அரிஹாந்த் என்ற தனியார் வீட்டு வசதி நிறுவனம் உள்ளது. ஃபிளாட்டுகள்கட்டித்தருவது, வீடு கட்ட கடன் தருவது ஆகியவற்றை இந்த நிறுவனம் செய்து வருகிறது.
இந்த நறுவனத்திற்கு அரசு வங்கியான ஹட்கோவிலிருந்து ரூ. 17 கோடி அளவுக்கு முறைகேடாக பணம்கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தெரியவந்ததையடுத்து, கடன் வழங்கியபோது, ஹட்கோவின் சென்னைமண்டல தலைமை அதிகாரியாக இருந்த அருண்குமாரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனைநடத்தினர்.
மேலும் அரிஹாந்த் நிறுவன அதிகாரிகள் வீட்டிலும் அலுவலகங்களிலும் ரெய்ட் நடந்தது.
இதில் அருண்குமாரின் சென்னை நொளம்பூர் வீட்டிலிருந்து ரூ. 1 லட்சம் பணம், சொத்துப் பத்திரங்கள், நிலஆவணங்கள், வங்கி லாக்கர் சாவிகள் ஆகியவை சிபிஐ அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அருணகுமாருக்கு பல ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் தொடர்பு உள்ளதும், அந்த நிறுவனங்களுக்குநிலம் வாங்க ஹட்கோ நிதியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அருண்குமாரை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அவர் தற்போது ஹைதராபாத்அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். விசாரணைக்காக சென்னைக்கு வருமாறு அருள் குமாருக்கு சிபிஐ சம்மன்அனுப்பியுள்ளது.
அவர் விசாரணைக்காக சென்னை வந்ததும், அவரது பெயரில் உள்ள 10 வங்கி லாக்கர்களையும் திறந்து பார்க்கசிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications