ஆற்காடு வீராசாமி வழக்கு: ஜெவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமி மீது சென்னை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கைவிசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கைத் தொடர்ந்த முதல்வர்ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சில ஆண்டுகளுக்கு முன் முன்னாள் தலைமைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன் தாக்கப்பட்டார். இதுதொடர்பாகமுதல்வர் ஜெயலலிதாவை குற்றம் சாட்டி ஆற்காடு வீராசாமி பேட்டியளித்திருந்தார்.
இதையடுத்து ஆற்காடு வீராசாமி மீது ஜெயலலிதா சார்பில், தமிழக அரசின் வழக்கறிஞர், சென்னை எழும்பூர்தலைமை மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரிக்கத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆற்காடு வீராசாமி மனுசெய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஆற்காடு வீராசாமி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவைஇன்று விசாரித்த நீதிபதிகள் சபர்வால், அகர்வால் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ஆற்காடு வீராசாமிமீதான வழக்கை விசாரிக்க சென்னை நீதிமன்றத்துக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
மேலும் இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications