மனித உரிமை குழு அலுவலகத்தில் போலீஸ் ரெய்டு
மதுரை :
ஒரு குற்றவாளியைத் தேடுவதாகக் கூறி மதுரையில் உள்ள பிரபலமான பியூப்பிள்ஸ் வாட்ச் மனித உரிமைஅலுவலகத்தில் போலீஸார் இன்று ரெய்டு நடத்தினர்.
இந்த அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற மனித உரிமைக் குழு என்பது குறிப்பிடத்தக்கது.இதன் இயக்குனர் ஹென்ரி டிபேன் மிகப் பிரபலமான வழக்கறிஞராவார்.
இந்த அமைப்பின் அலுவலகத்தில் ஒரு குற்றவாளி தங்கியருப்பதாகக் கூறி விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த30க்கும் மேற்பட்ட போலீஸார் இன்று ரெய்டு நடத்தினர்.
முன்னதாக போலீஸார் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஆப்ரஹாம் லிங்கனிடம் இந்த சோதனைக்காகவாரண்டும் பெற்றனர். ஆனால், ரெய்டில் எதிர்பார்த்த குற்றவாளி சிக்கவில்லை என்று மாஜிஸ்ரேட்டிடம் பின்னர்போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் தங்களை அச்சுறுத்தவும், பழி தீர்க்கவுமே இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக ஹென்றி டிபேன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருத்தங்கலில் எஸ்தர் மேரி என்பவர் அளித்த தவறான புகாரின் அடிப்படையில் மூன்று பேர் சட்டவிரோதமாகக்கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் போலீசார் மிருகத்தனமாகத் தாக்கியதாகவும், முறைகேடாககாவலில் வைத்து அடித்ததாகவும் புகார் வந்தது.
இதையடுத்து பியூப்பிள்ஸ் வாட்ச் இது தொடர்பாக விசாரணை நடத்தியது. பின்னர் பெண்களுக்கான தேசிய மனிதஉரிமைக் கமிஷன் இதை விசாரித்தது. அப்போது திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் உள்பட பல ஐபிஎஸ் அதிகாரிகளைமனித உரிமைக் கமிஷன் குடைந்து எடுத்தது.
இதனால் கோபமடைந்த காவல்துறை அதிகாரிகள் எங்களைப் பழிவாங்கும் நோக்கில் பொய்யானபுகாரின்பேரில் அலுவலகத்தை சோதனையிட்டனர் என்றார் டிபேன்.
மேலும் ரெய்ட் நடத்தியபோது, உங்க வேலையை மட்டும் பார்க்கனும், போலீஸ் விஷயத்தில் தலையிடக் கூடாதுஎனவும் சில அதிகாரிகள் இந்த அமைப்பினரை மிரட்டியதாகவும் தெரிகிறது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications