சந்திரிகாவுக்கு பயப்பட மாட்டேன்: ரணில்
கொழும்பு:
அதிபர் சந்திரிகாவின் செயல்பாடுகளால் நாட்டில் தேவையில்லாத, அராஜகமான சூழலையும் ஏற்படுத்தியுள்ளதாகபிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்,
வாஷிங்டனில் உள்ள அவர் விடுத்துள்ள அறிக்கையில், அதிபர் சந்திரிகா பொறுப்பற்ற முறையில்செயல்பட்டுள்ளார்.
சந்திரிகாவின் அச்சுறுத்தலுக்கு எனது அரசு பணியாது. இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்படுத்தவும், தமிழர்பிரச்சனைக்குத் தீர்வு காணவும் எனது அரசு தொடர்ந்து பாடுபடும்.
நாட்டின் அமைதிக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதால் அரசுப் படைகளும் போலீசாரும் அமைதி காக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் ரணில்.
சந்திரிகாவின் அதிரடி அரசியலுக்கு அஞ்சி உடனடியாக நாடு திரும்பப் போவதில்லை எனவும், தொடர்ந்துஅமெரிக்க நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தான் நாட்டுக்குத் திரும்புவோம் என்றும் வெளியுறவுத்துறைஅமைச்சர் டைரன் பெர்னாண்டோ கூறினார்.
இன்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை பிரதமர் ரணில் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications