சட்டசபை நடவடிக்கை கவலை தருகிறது: அத்வானி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழக அரசின் நடவடிக்கைகள் கவலை தருவதாக தமிழக எம்பிக்கள், எம்எல்ஏக்களிடம் துணைப் பிரதமர்அத்வானி கூறியுள்ளார்.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையிலான 57 தமிழக எதிர்க் கட்சி எம்எல்ஏக்கள் ஹோட்டல்அசோகாவில் இன்று அத்வானியைச் சந்தித்து, பத்திரிக்கைகளுக்கு எதிராக தமிழக சட்டசபை எடுத்துள்ளநடவடிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர்.
அப்போது மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராஜா, ஏ.கே.மூர்த்தி, என்.டி.சண்முகம், கண்ணப்பன், செஞ்சிராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
அவர்களிடம் பேசிய அத்வானி, முன்னால் பத்திரிக்கையாளன் என்ற முறையில் தமிழக அரசின் நடவடிக்கைகள்என்னை வருத்தமளிக்கிறது என்றார்.
இந்தக் குழுவினர் இன்று மாலை பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து மனு கொடுக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications