பத்திரிக்கையாளர்களும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
சென்னை:
உச்ச நீதிமன்றத்தில், இந்து பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்துள்ள மனுவுக்கு ஆதரவாக சென்னையைச் சேர்ந்தபல்வேறு பத்திரிக்கையாளர்கள் சங்கங்களும் கோரிக்கை மனுவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளன.
சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம், சென்னை பிரஸ் கிளப், பத்திக்கையாளர் நடவடிக்கைக் குழு ஆகிய 3அமைப்புகளும் இன்று இந்து பத்திரிக்கையாளர்கள் மீதான மனு விசாரணைக்கு வரும் போது,இந்த கோரிக்கைமனுவைத் தாக்கல் செய்யவுள்ளன.
இதற்கிடையே, டெல்லி பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் இன்று பிரமாண்டமான பேரணி மற்றும்ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
தமிழக அரசைக் கண்டித்தும், சபாநாயகர் தனது உத்தரவைத் திரும்பிப் பெறக் கோரியும், தீன் மூர்த்திபவனிலிருந்து பேரணியாகக் கிளம்பி தமிழ்நாடு பவன் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்திலும் தமிழக சட்டசபை நடவடிக்கைகளைக் கண்டித்து, முன்னாள் முதல்வர் ஈ.கே.நாயனார் தலைமையில் பத்திரிக்கையாளர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications