காளிமுத்துவின் விளக்கத்திற்கு என்.ராம் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்து பத்திரிக்கை மீதான நடவடிக்கைக்கு முதல்வர் ஜெயலலிதா காரணமல்ல என்று சபாநாயகர் காளிமுத்துகூறியுள்ளது தவறு என்று இந்து தலைமை ஆசிரியர் என்.ராம் கூறியுள்ளார்.

சபாநாயகர் காளிமுத்து நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், முதல்வருக்கும், இதற்கும் எந்த சம்பந்தம் இல்லை.இந்துவிடம் விளக்கம் கோரப்பட்டிருந்தது. அந்த விளக்கம் கிடைத்தவுடன் அது உரிமைக் குழுவினரால்பரிசீலிக்கப்பட்டு அதன் பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு என்.ராம் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், சபாநாயகர் சொல்வதில் சற்றும்உண்மையில்லை. பல விஷயங்களை அவர் மறைக்கிறார்.

இந்துவுக்கு சட்டசபை உரிமைக் குழு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸிற்கு ரவி (இந்துஆசிரியர்) அளித்த விரிவான பதிலில் இந்த விளக்கம் உரிமைக் குழுவிற்கு திருப்தி அளிக்கவில்லை என்றால்நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் தயாராக இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.

ஆனால் இதை சபாநாயகர் முற்றிலும் மறைத்து விட்டார். அவர் பாரபட்சமாக நடப்பதற்கு அவரது விளக்கமேநல்ல சாட்சியாகும் என்றார் ராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+