சவுதியில் அல்-கொய்தா தாக்குதல்: 17 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ரியாத்:

சவுதியில் அல்-கொய்தா தீவிரவாதிகளின் தற்கொலைப் படையினர் 2 கார்களில் குண்டுகளுடன் வந்து வீடுகளில்மோதி பயங்கரத் தாக்குதல் நடத்தினர். இதில் 17 பேர் உடல் சிதறி இறந்தனர்.

சவுதியின் தலைநகரான ரியாத்தின் மேற்குப் பகுதியில் உள்ள அல்-முகயா என்ற குடியிருப்புப் பகுதியில் ஏறத்தாழ200 வீடுகள் உள்ளன.

இந்தக் குடியிருப்புக்கு நேற்று அதிகாலை நேற்று அதிகாலை 2 மணியளவில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட இருகார்களில் வந்த தீவிரவாதிகள் வீடுகளின் மீது கார்களை மோதி இந்த பயங்கர வெடிகுண்டு மோதலை நடத்தினர்.அவர்கள் சவுதி காவல்துறையினர் போல் உடையணிந்திருந்தனர்.

இந்த பயங்கர சம்பவத்தில் இந்தியர்கள் உட்பட வீடுகளில் இருந்த 17 பேர் உடல் சிதறி இறந்தனர். 100 பேருக்குபலத்த காயம் ஏற்பட்டது.

நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் ரியாத்தையே உலுக்கியது. போர்க்களம் போல் காட்சியளிக்கு அப்பகுதியில்மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அல்-கொய்தா தலைவர் பின்லேடனை அமெரிக்கா சர்வதேச தீவிரவாதியாக அறிவித்துள்ளது. இங்கிலாந்தும்அமெரிக்காவை ஆதரிக்கிறது. இவ்விரு நாடுகளுக்கும் சவுதி கச்சா எண்ணெயை வழங்குவதால் பின்லேடனின்இயக்கம் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+