இந்து, முரசொலி ஆசிரியர், நிருபர்களை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்து பத்திரிக்கை ஆசிரியர் ரவி, எக்சிகியூட்டிவ் எடிட்டர் மாலினி பார்த்தசாரதி, பதிப்பாளர் ரங்கராஜன், தலைமைநிருபர் ஜெயந்த், சிறப்பு நிருபர் ராதா வெங்கடேசன், முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோரைக் கைது செய்யும்சபாநாயகர் காளிமுத்துவின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இதனால் அவர்களைக் கைது செய்ய முடியாத நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் இந்துவின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வாதாடினார். அவர் பேசுகையில்,சட்டமன்றத்துக்கான அதிகார வரம்புகள் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது என்றார்.

அதே போல முரசொலி செல்வத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார்.

நீதிபதிகள் சபர்வால், ஏ.பி.சின்ஹா ஆகியோர் அடங்கிய அரசியல் சட்ட பெஞ்ச் காலை 10.30 மணிக்கு இந்தமனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. உடனடியாக கைது உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

மேலும் இந்த உத்தரவை உடனடியாக தமிழக டிஜிபிக்குத் தெரியப்படுத்துமாறு நீதிமன்றப் பதிவாளருக்குஉத்தரவிட்ட நீதிபதிகள், சபாநாயகர் காளிமுத்து, நீதிமன்றச் செயலாளர், தமிழக டிஜிபி கோவிந்த், மத்திய அரசின்தலைமை வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேற்கொண்டு இந்த வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்த வழக்கில்சோலி சொராப்ஜிக்கும் நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளது, இதில் மத்திய அரசின் நிலை என்பதை அறியவேஎன்று தெரிகிறது.

ராம் மகிழ்ச்சி:

உச்சநீதிமன்ற உத்தரவு வெளியான தகவல் அறிந்ததும் இந்து அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்துஊழியர்களும் அலவலக வளாகத்தில் கூடி பட்டாசுகளை வெடித்தனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளையும்வழங்கினர்.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளதாக இந்து தலைமை ஆசிரியர் என்.ராம்தெரிவித்தார்.

நாங்கள் இந்திய தலைமை நீதி அமைப்பின் மீதும், உச்ச நீதிமன்றத்தின் மீதும் வைத்திருந்த நம்பிக்கை வீண்போகவில்லை என்றார். நீதிமன்றத் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து எனக்கு கொஞ்சம் கூட சந்தேகமேஇருக்கவில்லை, இதனால் நான் பதற்றப்படவும் இல்லை.

சிறப்பான முறையில் மனுவைத் தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கறிஞர்களைப் பாராட்டுகிறேன்.பத்திரிக்கைச் சுதந்திரத்துக்காக போராடினோம். எங்களுடன் துணை நின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

பத்திரிக்கைச் சுதந்திரத்தின் எல்லை எது என்பதை நிர்ணயிக்கும் பொறுப்பு தற்போது உச்சநீதிமன்றத்தின் கையில்ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்து எடுத்த நிலை சரியானதா, தவறா என்பதையும் உச்சநீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும் என்றார் ராம்.

உச்ச நீதி மன்றத்தின் தடை உத்தரவு பற்றி தமிழக அரசிற்கு தெரிய வரும் முன்பு வழக்கில் சம்பந்தம் உடையயாரும் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+