இந்துவுக்கு மத்திய தொழில்படை பாதுகாப்பு: அத்வானி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்து நாளிதழ் அலுவலகம், அதன் தலைமை ஆசிரியர் என்.ராம் வீடு மற்றும் 4 இந்து நிருபர்களின் வீடுகளுக்குமத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்து நாளிதழின் தலைமை ஆசிரியர் என்.ராம் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்து அலுவலகத்தைச்சுற்றிலும் மப்டி உடையில் போலீஸார் நிற்கிறார்கள். இந்து ஊழியர்களைக் கண்காணித்து வருகின்றனர். மிரட்டல்விடும் தொனியில் பேசுகிறார்கள்.

மேலும் நிருபர்களின் வீட்டின் முன்பும் நின்று கொண்டு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர். இந்துவுக்குவரும் கார்கள், வாகனங்களை நிறுத்தியும் மிரட்டி வருகின்றனர். எனவே மத்திய போலீஸ் பாதுகாப்பு கோரிதுணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான அத்வானிக்கு கடிதம் அனுப்ப உள்ளேன் என்றார்.

அதே போல நேற்று மாலையே அவசர பேக்ஸ் கடிதத்தை உள்துறைக்கு ராம் அனுப்பினார். அத்தோடு பிரதமர்அலுவலகத்துடனும் பேசினார்.

இதையடுத்து ரஷ்யாவில் இருந்து அத்வானியுடன் தொலைபேசியில் விவாதித்த பிரதமர் வாஜ்பாய் உடனேமத்தியப் படைப் பாதுகாப்பை வழங்க வழி செய்யுமாறு கூறினார்.

இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையிடம் இந்து அலுவலகம், மற்றும் ராம் மற்றும் மூத்த இந்துநிருபர்களின் வீடுகளுக்கு பாதுகாப்புத் தருவது தொடர்பாக திட்டம் தயாரிக்க அத்வானி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து உடனடித் திட்டம் தயாரானது. அத் திட்டத்துக்கு உள்துறை இரவோடு இரவாக அனுமதி அளித்தது.

இதையடுத்து தமிழக காவல்துறை டிஜிபி கோவிந்த்தை, உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஹர்மிந்தர்சிங் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மத்திய அரசு பாதுகாப்புத் தரப் போவது குறித்த தகவலைத்தெரிவித்தார்.

மேலும் சென்னையில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் அதிகாரிகள் இரவிலேயே என்.ராமையும்சந்தித்து ஆலோசனை நடத்தினர். அவர்களிடம் ராம், தமிழக போலீசாரின் கொடுத்து வரும் தொல்லை குறித்துவிளக்கினார். இதையடுத்து எந்தெந்த இடத்தில் மத்தியப் படை போலீசாரை நிறுத்துவது என்பது குறித்துஆராய்ந்துவிட்டு அதிகாரிகள் கிளம்பிச் சென்றனர்.

இது குறித்து இன்று காலை நிருபர்களிடம் பேசிய ராம், எனது கோரிக்கையை ஏற்று உடனடியாக பாதுகாப்புவழங்க ஒப்புக் கொண்ட துணைப் பிரதமர் அத்வானியை காலையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றிதெரிவித்தேன். அப்போது பத்திரிக்கை தர்மத்துக்காகவும், சுதந்திரத்துக்காகவும் இந்து தீவிரமாகப் போராட முன்வந்துள்ளதற்கு அத்வானி பாராட்டு தெரிவித்தார்.

மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவை முழுமையாக மதிப்போம், இந்து பத்திரிக்கையாளர்களைக் கைது செய்யமாட்டோம் என முதல்வர் ஜெயலலிதா நேற்றிரவு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுவரை உச்ச நீதிமன்ற உத்தரவுகுறித்து அமைதியாக இருந்த ஜெயலலிதா இப்போது தனது நிலையை முதன்முறையாக தெளிவாக்கியுள்ளார். இதைநான் வரவேற்கிறேன் என்றார்.

ஜெயலலிதாவின் அறிக்கை காரணமாக இப்போது பாதுகாப்பாக உணர்கிறீர்களா என்று கேட்டபோது, நான்எப்போதுமே பயந்ததில்லை. பெங்களூரில் ஒரு கும்பல் (தமிழக போலீஸ் என சந்தேகம்) எங்கள் காரை வழிமறித்து முரட்டுத்தனமாக நடந்து கொண்டது. அது போல மீண்டும் நடக்கக் கூடாது. எனது நிருபர்களின்குடும்பத்தினருக்கு அது போன்ற அனுபவம் ஏற்பட்டுவிடக் கூடாது.

இதற்காகத் தான் மத்தியப் படையின் பாதுகாப்பு கேட்டேன். எப்போது பாதுகாப்பைத் தருவது என்பது குறித்துஇன்னும் மத்தியப் படை முடிவு செய்யவில்லை என்றார் ராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+