நாயுடு சிபாரிசை ஏற்று ஆந்திர சட்டமன்றம் கலைப்பு
ஹைதராபாத்:
ஆந்திர சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு முன் கூட்டியே தேர்தலை சந்திக்க தெலுங்கு தேசம் கட்சியின் முதல்வர்சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை இன்றேஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் நாயுடு ஒப்படைத்தார். அதை ஆளுநரும் ஏற்றுக் கொண்டு சட்டமன்றத்தைக்கலைத்தார்.
அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை ஆட்சியில் இருக்க பதவிக் காலம் இருந்தாலும், சமீபத்தில் நக்சல்களால்நடத்தப்பட்ட தாக்குதலில் உயிர் தப்பியதால் கிடைத்துள்ள அனுதாப அலையை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நாயுடு முடிவு செய்துள்ளார்.
நேற்று தனது கட்சியின் பொலிட் பீரோவைக் கூட்டிய நாயுடு, சட்டமன்றத் தேர்தலை ஓராண்டுக்கு முன்பேநடத்திவிடும் முடிவைத் தெரிவித்தார். இதற்கு பொலிட் பீரோவில் முழு ஆதரவு கிடைத்தது.
இதையடுத்து இன்று அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிய நாயுடு, சட்டசபையைக் கலைக்கும் தீர்மானத்தைநிறைவேற்றினார்.
சாப்ட்வேர் வளர்ச்சி மற்றும் ஹைதராபாத்தின் வளர்ச்சியைத் தவிர வேறு அனைத்து விஷயங்களிலும் நாயுடுவின்அரசு முழுத் தோல்வி அடைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
தினந்தோறும் விவசாயிகள் தற்கொலை நடப்பதும் வழக்கமாகிவிட்டது. இந் நிலையில் அடுத்த ஆண்டு தேர்தலைச்சந்தித்தால் தோல்வி உறுதி என்பதை நாயுடு உணர்ந்துள்ளார்.
இதனால் இப்போது மக்கள் மத்தியில் உருவாகியுள்ள அனுதாப அலையை வைத்து மீண்டும் வெற்றி பெற்றுவிடமுடியும் என்று கணக்கிட்டு, தேர்தலைச் சந்திக்க முடிவு செய்துள்ளார்.
இது குறித்து இரு வாரங்களுக்கு முன் பிரதமர் வாஜ்பாயுடன் நாயுடு பேசினார். இதைத் தொடர்ந்து துணைப்பிரதமர் அத்வானி ஹைதராபாத் வந்து நாயுடுவுடன் இந்த விஷயம் குறித்து பேசிவிட்டுச் சென்றார்.
இந் நிலையில் தேர்தலைச் சந்திக்கத் தயாராகவே இருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. சட்டமன்றம்கலைக்கப்பட்டாலும் தேர்தல் வரை முதல்வர் பொறுப்பில் நாயுடு தொடர்வார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications