பண்ணையார் எண்கெளன்டர் வழக்கு: சுடப்பட்ட நீதிபதியின் மருமகன் சாவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்ட நீதிபதி ராமனின் மருமகன் வெங்கடேசன்சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Judge Ramans son-in-law Venkatesan

சுடப்பட்ட வெங்கடேசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த படம்
தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடேச பண்ணையார் சென்னையில் சுடப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ராமன் தலைமையில் ஒரு நபர் கமிஷனைத் தமிழக அரசு கடந்த மாதம்அமைத்தது.

இந்தக் கமிஷன் அமைக்கப்பட்ட சில நாட்களில், அதாவது அக்டோபர் 22ம் தேதி,

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ளராமனுடைய மருமகன் வெங்கடேசன் அடையாளம் தெரியாத சிலரால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

Venkatesa Pannaiyarஇடுப்புக்குக் கீழே பலத்த காயத்துடன் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அக்டோபர்24ம் தேதி விமானம் மூலம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்குதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் வெங்கடேசன் மரணமடைந்தார்.

வெங்கடேசன் மரணத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிரான சூழ்நிலையில், வெங்கடேசன் இறந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. சாவுடன் போராடி அதில் அவர்தோற்றிருப்பது ராமன் குடும்பத்தினருக்கு மிகுந்த மன வேதனை அளித்திருக்கும். இதனால் நான் மிகவும்வருத்தமடைந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

வெங்கடேசனை சுட்டவர்கள் யார் என்ற துப்பு இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+