போலீசாருடன் மோதல்: கர்நாடகத்தில் இரு பெண் நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொலை
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் உடுப்பி மாநிலத்தில் இரு பெண் நக்ஸலைட்டுகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருபெண் நக்ஸல் காயங்களுடன் பிடிபட்டார். மேலும் இரு ஆண் நக்ஸல்கள் தப்பிவிட்டனர்.
பொல்லாட்டூ வனப் பகுதியில் இவர்கள் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டதாக மாநில டிஜிபி மடியால்நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது தாக்குதல் நடந்த பின்னர் போலீசாரின் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டதால்,நக்ஸலைட்டுகள் அங்கிருந்து தப்பி கர்நாடகத்துக்குள் ஊடுருவியுள்ளனர்.
பொல்லாட்டு வனப் பகுதியில் நக்ஸல்கள் நடமாட்டம் இருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து சிறப்புப்படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந் நிலையில் இன்று அதிகாலை வனப் பகுதியில் உள்ளஒரு வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர்.
அப்போது நக்ஸல்களுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் ஒரு பெண்நக்ஸலைட் அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். காயமடைந்த இன்னொரு பெண் சிறிது நேரத்தில்இறந்தார்.
இன்னொரு பெண் நக்ஸலைட் படுகாயங்களுடன் பிடிபட்டார். மேலும் இரு ஆண் நக்ஸல்கள்தப்பியோடிவிட்டனர்.
முன்னதாக நக்ஸல்கள் திருப்பிச் சுட்டதில் 2 போலீசாரும் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications