கோவையில் கத்தி முனையில் இரு பெண்களை கற்பழித்த 14 காமுகர்கள்
கோவை:
கோவையில், 14 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்ட 2 பெண்கள் வழக்கில், 6குற்றவாளிகளைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
![]() |
| இரு பெண்களை கற்பழித்த கும்பலில் இதுவரை பிடிபட்டுள்ள 6 பேர் |
கோவை செல்வபுரத்தில் உள்ள சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் (பெயர்கள்தவிர்க்கப்பட்டுள்ளது) பணியாற்றி வருகிறார்கள். திங்கள்கிழமை மாலை 6 மணியளவில் இருவரும் வேலைமுடிந்து, கள்ளுக்காட்டு பகுதி வழியாக வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்தப் பகுதியில் கஞ்சா அடித்துக் கொண்டும், சீட்டு விளையாடிக் கொண்டும் இருந்த 14 பேர்கொண்ட கும்பல் வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, இருவரையும் கொடூரமாகக் கற்பழித்தது. கோவை நகரில்நடந்த இந்தக் கொடூரக் கற்பழிப்பால் நகரமே பெரும் பரபரப்பில் ஆழ்ந்தது.
இரு பெண்களும் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டபோது, அவர்களின் கூக்குரலைக் கேட்ட பிரபு என்பவர் அந்தப்பகுதிக்கு வந்து பார்த்துள்ளார். 2 பெண்களையும் மீட்க அவர் முயன்றுள்ளார். ஆனால் அந்தக் கும்பல் அவரைவிரட்டியுள்ளது.
வேண்டுமானால் நீயும் எங்களுடன் சேர்ந்து கொள் என்று கூறியுள்ளனர். இதையடுத்து அவரும் சேர்ந்து அந்தப்பெண்களைக் கற்பழித்துள்ளார். மனித மிருகங்களால் மிக மோசமாக சீரழிக்கப்பட்ட இரு பெண்களும் இரவில்தட்டுத் தடுமாறி வீடு திரும்பி நடந்ததைக் கூறி கதறி அழுதனர்.
இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் திரண்டு வந்து கள்ளுக்காட்டுப் பகுதியில் தேடினர். ஆனால் காமக்கொடூரர்கள் யாரும் சிக்கவில்லை. இதைத் தொடர்ந்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் உடனடியாகவழக்குப் பதிவு செய்து கற்பழிப்பில் ஈடுபட்டவர்களைத் தேடினர்.
இந் நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பிரபு பிடிபட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்அடிப்படையில், சீனிவாசன், சரவணன், வெள்ளியங்கிரி, மணிகண்டன், சற்குணன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். மற்றவர்களையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!













Click it and Unblock the Notifications