மாணவியை சீண்டிய ஆசிரியர்: பாண்டிச்சேரி மாணவர்கள் கொந்தளிப்பு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் பிளஸ் ஒன் படிக்கும் மாணவியிடம் பாலியல் குறும்பு செய்த ஆசிரியரை டிஸ்மிஸ் செய்யக்கோரி மிகப் பெரிய போராட்டத்தில் மாணவர்கள் இறங்கினர்.
பாண்டிச்சேரி, கோமேடு இந்திரா நகரில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வரும் மாணவிஒருவரை, அவரது வகுப்பு இயற்பியல் ஆசிரியர், கையைப் பிடித்தும், வேறு மாதிரியான பாலியல் குறும்பும்செய்துள்ளார்.
இதேபோல, அந்த வகுப்பைச் சேர்ந்த பல்வேறு மாணவிகளிடம் இவர் அடிக்கடி இதுபோல அத்துமீறியுள்ளதாகத்தெரிகிறது. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் மாணவ, மாணவியர் பல முறை புகார் கூறியும் ஒரு நடவடிக்கையும்இல்லை.
இதனால் கொந்தளித்துப் போன மாணவ, மாணவியர் 400 பேர் நேற்று பள்ளி வளாகத்தில் திரண்டனர்.உடனடியாக ஆசிரியர் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்று வற்புறுத்திய அவர்கள் பின்னர் ஊர்வலமாககிளம்பி, சட்டசபை வளாகத்தில் உள்ள கல்வி அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் சென்றனர்.
அமைச்சரிடம் சென்ற மாணவர் பிரதிநதிகள், சம்பந்தப்பட்ட ஆசிரியரை உடனடியாக பணி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களது புகார் மனுவை வாங்கிய அமைச்சர் லட்சுமி நாராயணன்,
இது தொடர்பாக கல்வித்துறை இயக்குநர் தேவநீதிதாஸ் மற்றும் இணை இயக்குநர் விஜயலட்சுமி ஆகியோர்ஏற்கனவே விசாரணை நடத்தி வருவதாகவும், உரிய நடவடிக்கை இன்னும் 2 நாட்களில் எடுக்கப்படும் என்றும்மாணவர்களிடம் தெரிவித்தார்.
இதற்கிடையே விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட ஆசிரியரை காலவரையற்ற விடுப்பில் செல்லுமாறுகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதுவையில் சமீப காலமாக அடிக்கடி பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளிடம்பாலியல் குறும்பு செய்வதும், மாணவர்களை சரமாரியாக அடிப்பதும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications