அஸ்ஸாம்- பிகார் மோதல் தீவிரம்: இதுவரை 46 பேர் பலி- மும்பையில் வெளிமாநிலத்தவர் மீது தாக்குதல்
கெளஹாத்தி:
அஸ்ஸாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நடந்த தாக்குதல்களில் பிகாரைச் சேர்ந்தமேலும் 11 தொழிலாளிகள் உல்பா தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் அஸ்ஸாமில்நடந்துள்ள தாக்குதல்களில் இதுவரை 46 பிகார்வாசிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாமிய ரயில்வே பணிகளுக்கு ஆளெடுப்பதில் தான் இந்த மோதல் உருவானது. இந்தப் பணிகளில் சேரஏராளமாக பிகார் மாநிலத்தவர் வந்ததால், அதற்கு எதிராக அம் மாநிலத்தில் போராட்டம் வெடித்தது. அஸ்ஸாம்தீவிரவாத அமைப்பான உல்பா பிகார்வாசிகளை சுட்டுத் தள்ள ஆரம்பித்துள்ளது.
இதையடுத்து பிகாரில் அஸ்ஸாமியர்கள் மீது தாக்கதல்கள் தொடங்கின. பல அஸ்ஸாமிய குடும்பங்களைபிகாரிகள் தாக்கினர். அஸ்ஸாம் ரயில்களில் வந்தவர்களையும் தாக்கினர். ஒரு அஸ்ஸாமிய இளம்பெண்ணைரயிலில் வைத்தே உடைகளை உருவி நிர்வாணமாய் விட்டனர்.
இதையடுத்து அஸ்ஸாமில் பிகாரிகள் மீதான தாக்குதல் மேலும் தீவிரமானது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுதலையிட வேண்டும் என பிகார் முதல்வர் ராப்ரிதேவியின் கணவர் லல்லு பிரசாத் யாதவும், அஸ்ஸாம் முதல்வர்தருண் கோகோயும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து மத்தியப் படைகளை இரு மாநிலங்களுக்கும் பிரதமர் வாஜ்பாய் அனுப்பினார். ஆனாலும் இன்னும்இந்த ரத்த வெறிக் கலவரம் முடிவுக்கு வரவில்லை. அஸ்ஸாமின் பல மாவட்டங்களில் ஊரடங்குஅமலாக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழப்பத்தில் சிவசேனையும் குதித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் ரயில்வே பணிகளில் மராட்டியர்களுக்கேஅதிக இடம் தர வேண்டும் என்று கோரி ரயில்வே தேர்வாணைய அலுவலகத்தை பால்தாக்கரேயின் சிவசேனாதொண்டர்கள் நேற்று தாக்கினர்.
மேலும் மும்பை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வெளியூர் பயணிகளையும் சிவசேனா தொண்டர்கள்அடித்து விரட்டினர்.
இந் நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் அஸ்ஸாமின் பார்டுபி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகாகாளிதேயிலைத் தோட்டத்திற்கு அருகே உள்ள செங்கல் காலவாசல் மீதும் மற்றும் அங்கிருந்து 5 கி.மீ தொலைவில்இருக்கும் லங்கேஷ் தேயிலை தோட்டத்திற்கு அருகே உள்ள மற்றொரு செங்கல் காலவாசல் மீதும் உல்பாதீவிரவாதிகள் தீடீர்த் தாக்குதல் நடத்தினர்.
இதில் முதல் காலவாசலில் வேலை செய்து கொண்டிருந்த பிகாரிகள் 8 பேரும், இரண்டாவது காலவாசலில் வேலைசெய்து கொண்டிருந்த பிகாரிகள் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
இன்றைய கலவரத்திற்குப் பின் டின்சுகியா மாவட்ட போலீஸ் டெபுடி கமிஷனர் தாஸ் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளார். மற்றும் எஸ்.பி கோபால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த மோதல்கள் காரணாக அஸ்ஸாம், பிகார், மகாாஷ்டிரத்தில் ஆகிய மாநிலங்ளில் ரயில்வே பணிகளுக்குஆளெடுக்க நடத்தப்பட இருந்த அனைத்துத் தேர்வுகளையும் ரயில்வே வாரியம் ரத்து செய்துவிட்டது.
ஆனால் சென்னையில் தேர்வுகள் நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.சென்னையில் மொத்தம் 146 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications