உயர் நீதிமன்றத்தில் ஜனனி ஆஜர்: கண்ணீர் விட்டு அழுகை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கஞ்சா வழக்கில் கைதாகியுள்ள நடராஜனின் தோழியான மதுரை பெண் ஜனனி இன்று சென்னைஉயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஜனனி கண்ணீர் விட்டு அழுதார்.

ஜாமீனில் விடக் கோரி ஜனனியும் அவரது தாயார் ரமீஜாவும் உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். இந்தமனுவை நீதிபதி கற்பக விநாயகம் விசாரித்து வருகிறார்.

அப்போது ஜனனிக்கு ரூ. 1.4 கோடி பணம் வந்தது எப்படி?, ஜனனியை இரவோடு இரவாக கைது செய்துசென்னை- மதுரைக்கு அலைகழித்தது ஏன்?, ஜனனிக்கு எதிராக போலீசார் மிக அவசரமாக வழக்கை நடத்தியதுஏன்?, ஜனனி ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதியவர் தானா என்ற கேள்விகளை எழுப்பினார்.

மேலும், ஜனனியின் மதுரை அன்புநகர் வீட்டுச் சாவியை உடனடியாக அவரது அண்ணன் கெய்சர் ராஜாவிடம்ஒப்படைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து மதுரை டி.எஸ்.பி. ராமன் ஜனனி வீட்டுச் சாவிகளை,சென்னையில் வைத்து கெய்சர் ராஜாவிடம் ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து கெய்சர் ராஜா நேற்று மதுரைக்குவந்தார்.

அவரும், வழக்கறிஞர் சங்கரப ாண்டியனும், அன்பு நகர் வீட்டுக்குச் சென்று கதவைத் திறந்து உள்ளே சென்றுஏகப்பட்ட ஆவணங்களை சேகரித்துக் கொண்டு சென்னை புறப்பட்டனர். சுமார் இரண்டரை மணி நேரம் அவர்கள்வீட்டில் இருந்தனர்.

அவர்கள் வந்த காரில் அதிமுக கொடி பறந்தது. எம்.ஜி.ஆர். படம் கார் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்ததுகுறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வழக்கில் ஜனனியை நேரிலேயே விசாரிக்க, அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறுநீதிபதி கற்பக விநாயகம் உத்தரவிட்டிருந்தார்.

இந் நிலையில் இன்று காலை நீதிமன்றம் கூடியபோது, ஜனனியை போலீசார் ஆஜர்படுத்தப்படவில்லை. இதனால்நீதிபதி கோபமடைந்தார்.

அன்று (கடந்த 14ம் தேதி) அரசு வக்கீலுக்காக காத்திருக்க வேண்டியதாயிற்று. இன்று குற்றம்சாட்டப்பட்டவருக்காக காத்திருக்க வேண்டியுள்ளது என்று கோபமாக கேட்டார். பின்னர் மனு மீதானவிசாரணையைத் தொடங்கினார்.

அப்போது ஜனனியின் வழக்கறிஞர் சங்கரபாண்டியன், மதுரை அன்பு நகரில் உள்ள ஜனனியின் வீட்டிலிருந்துஅவரது அண்ணன் கெய்சர் ராஜா எடுத்து வந்துள்ள ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அதன் மீது விவாதம் தொடங்கியபோது, பிற்பகல் 1 மணியளவில் ஜனனியை போலீஸார் நீதிமன்றத்தில்ஆஜர்ப்படுத்தினர். அப்போது அவரிடம் நீங்கள் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதியது உண்மையா என்று நீதிபதி கேட்டார்.இதற்குப் பதிலளித்த ஜனனி, என் மனதில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அதை உங்களிடம் தனியாகதெரிவிக்க விரும்புகிறேன். நீதிமன்றத்தில் வெளிப்படையாக சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன் என்றார்.

அப்போது அவரது கண்களில் இருந்து நீர் வழிந்தது. இதையடுத்து வழக்கை பிற்பகலுக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

அப்போது என் சகேதாரைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என ஜனனி கோர, நீதிமன்ற வளாகத்திலேயே அவரைச்சந்திக்கலாம் என நீதிபதி அனுமதி அளித்தார். இதையடுத்து இருவரும் சந்தித்துப் பேசினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+