மூன்றாவது அணி: ஜெயலலிதா- பவார் ஆதரவாளர் நஜ்மா ஆலோசனை
சென்னை:
சோனியா அதிருப்தியாளரும், சரத்பவாரின் ஆதரவாளருமான ராஜ்யசபா துணை சபாநாயகர் நஜ்மா ஹெப்துல்லாஇன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து சரத்பவார் சார்பாக ஆலோசனை நடத்தவே அவர்ஜெயலலிதாவைச் சந்தித்ததாகத் தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனியே செயல்பட்டு வரும் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் சரத் பவார் அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடத்த தனது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவைத் தந்து வருகிறார்.
ஆனால், சோனியாவை பிரதமராக ஏற்க முடியாது என்று கூறி வரும் இவர் மூன்றாவது அணி அமைக்கும்முயற்சியில் உள்ளார்.
இந் நிலையில் அவரது ஆதரவாளரான நஜ்மா, போயஸ் கார்டனில் ஜெயலலிதாவைச் சந்தித்தார். அவரை தனதுபோர்டிகோ வரை வந்து, கட்டித் தழுவி வரவேற்று அழைத்துச் சென்றார் ஜெயலலிதா.
சுமார் ஒரு மணி நேரம் இருவரும் தனியே பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் வெளியே வந்த நஜ்மா, வெளியில்காத்திருந்த நிருபர்களிடம் பேச மறுத்துவிட்டார்.
தன்னை துணை ஜனாதிபதி பதவிக்கு சிபாரிசு செய்ய மறுத்த சோனியா மீது கோபத்தில் இருக்கும் நஜ்மா,இப்போது சரத்பவாருடன் கை கோர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications