புதிய தலைமை செயலகத்துக்கு எதிரான மனு: உயர் நீதிமன்றம் விசாரணை
சென்னை
புதிய தலைமைச் செயலகம் அமையவுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பழைய கட்டடங்களைஇரண்டு வார காலத்திற்கு இடிக்க மாட்டோம் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதை எதிர்த்து பொதுப்பணித் துறையின்முன்னாள் தலைமைப் பொறியாளர் சி.குப்புராஜ் உள்ளிட்ட 4 பேர் உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி ஞானப் பிரகாசம்முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குப்புராஜ் தரப்பு வக்கீல் வாதாடுகையில், நகர அமைப்புப்பிரிவின் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.
புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டால், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள 44அறிவியல், தொழில்நுட்ப நிலையங்கள் பாதிக்கப்படும். எனவே அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதியதலைமைச் செயலகம் அமைக்கத் தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதற்குப் பதில் அளிக்க 2 வார காலம் அவகாசம் கொடுக்குமாறு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வக்கீல்என்.ஆர்.சந்திரன் கோரிக்கை விடுத்தார். பழைய கட்டடங்களை இரண்டு வார காலத்திற்கு இடிக்க மாட்டோம்என்று தமிழக அரசு சார்பில் உறுதியளித்தார். அதை ஏற்ற நீதிபதிகள் 2 வார காலத்திற்கு வழக்கு விசாரணையைஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு











Click it and Unblock the Notifications