மலேசியாவில் மரண தண்டணையை எதிர்நோக்கும் 8 தமிழர்கள்
பரமக்குடி:
எண்ணற்ற கனவுகளுடன் மலேசியாவுக்கு வேலை தேடிச் சென்ற 8 தமிழர்கள் இப்போது மரண தண்டனைவிதிக்கப்பட்டு, சாவின் விளிம்பில் நிற்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளங்கோவன், செல்வம், சத்யேந்திரன்,திருசெல்வம், அபிமன்யன், குணசேகரன், வரதராஜன், சரவணன் ஆகியோர் வேலை தேடி மலேசியா சென்றனர்.இவர்கள் அனைவரும் கோலாலம்பூரில் ஒரு வீட்டின் முதல் மாடியில் வாடகைக்குத் தங்கியிருந்தனர்.
கடந்த வருடம் ஏப்ரல் 25ம் தேதி இவர்கள் குடியிருந்த வீட்டை மலேசிய போலீஸார் சோதனையிட்டனர்.சோதனையில் இவர்கள் தங்கியிருந்த பகுதியில் குற்றத்திற்கு உட்படும் வகையில் எந்த ஒரு பொருளையும்போலீஸார் கைப்பற்றவில்லை என்றாலும், வீட்டு உரிமையாளர் தங்கியிருந்த பகுதியில் போதைப்பொருள்களைக்கைப்பற்றினர்.
வீட்டு உரிமையாளரைக் கைது செய்துபோது, தமிழர்கள் 8 பேரையும் போலீஸார் கைது செய்தனர். வழக்குவிசாரணையின்போது இவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபணமாகவே, வழக்கை விசாரித்த நீதிபதி இவர்களைவிடுவிக்க உத்தரவிட்டார்.
ஆனால், விசாவில் குறிப்பிட்ட காலத்திற்கும் அதிகமாக மலேசியாவில் தங்கியிருந்தது, போதை மருந்து கடத்தியதுஉள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, போலீஸார் மீண்டும் இவர்களை நீதிமன்றத்தின் முன்நிறுத்தினர். இம் முறை 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.
மகன்கள் கைநிறைய சம்பாதித்து வீட்டிற்கு பணம் அனுப்புவார்கள் என்று எதிர்பார்த்திருந்த 8 பேர்களின்பெற்றோர்களும் குடும்பங்களும் இந்தத் தீர்ப்பினால் நிலை குலைந்து போயுள்ளன.
இப்போது ராமநாதபுரம் மாவட்ட மனித உரிமைக் கழகத்தின் அமைப்பாளர் முருகேசனின் உதவியோடு மத்தியஅரசு மூலம் மலேசியா அரசுக்கு மனு அளித்து தங்கள் பிள்ளைகளை விடுவிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
இது குறித்து முருகேசன் கூறுகையில், 8 பேரும் முறையான விசா மூலம்தான் மலேசியா சென்றுள்ளனர். போதைப்பொருளுக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டுஅவர்களைக் காக்க வேண்டும் வேண்டும் என்றார்.
இவர்களை விடுவிக்கக் கூறி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
கவர்னர் இனி யுனிவர்சிட்டி வேந்தரா? விஜய்யின் ஒப்புதலோடுதான் அமைச்சர் சொல்கிறாரா.. விசிக கேள்வி -
பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரா? அமைச்சர் விஸ்வநாதன் மீது பொன்முடி விமர்சனம் -
தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? விஜய் டிக் அடிக்கும் அந்த நேர்மையான அதிகாரி! வெளியான தகவல் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
விவசாய கடன் தள்ளுபடி.. டெல்டாவில் விஜய்க்கு பெருகும் எதிர்ப்பு! போராட்டத்தில் குதித்த விவசாயிகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
"விஜயை வேலை செய்ய விடுங்க".. மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேட்டி -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
செங் இஸ் கிங்.. பாஜக பாலிடிக்ஸை கையிலெடுத்த விஜய்! அலறும் கூட்டணி கட்சிகள்! கன் மாதிரி நிற்கும் தவெக -
பள்ளிகள் திறப்பு எப்போது? வெயில் கொளுத்தி வரும் நிலையில் முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை! -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
அதிமுகவில் இருந்து வந்தவர்களை சேர்த்தால்.. தவெக மீதான நம்பிக்கை போய்விடும்.. திருமாவளவன் வார்னிங்!












Click it and Unblock the Notifications