கில்லாடி பெண் சாராய வியாபாரிக்கு போலீஸ் வலைவீச்சு!
சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கற்பகவிநாயகம் முன்பு போலியான பெண்ணை ஆஜர் செய்து ஏமாற்ற முயன்றபெங்களூரைச் சேர்ந்த சாராய வியாபாரியைக் கைது செய்ய நீதிபதி கற்பகவிநாயகம் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த சாராய வியாபாரியை போலீஸார் வலைவீசித் தேடி வருகிறார்கள்.
பெங்களூர் வில்சன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி. இவர் கள்ளச்சாராய வியாபாரி ஆவார். இவர் மீதுபெங்களூர், சென்னை, ஆந்திரா உள்பட தென் மாநில நகரங்கள் பலவற்றில் வழக்குகள் உள்ளன.
யாரிடம் பிடிபடாமல் தப்பி வரும் ருக்மணி சென்னையில் உள்ள ஒரு வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கற்பகவிநாயகம், ருக்மணியை 15நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிட்டார்.
கில்லாடி ருக்மணி, வேறு ஒரு பெண்ணை ருக்மணி போல நீதிமன்றத்திற்கு அனுப்பி சரணடைய வைத்தார். ஆனால்ஆள்மாறாட்டத்தைக் கண்டுபிடித்து விட்ட நீதிபதி கற்பகவிநாயகம், ருக்மணியை உடனடியாகக் கைது செய்யுமாறுபோலீஸாருக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து கில்லாடி பெண் ருக்மணியை போலீஸார் வலை வீசித் தேடி வருகிறார்கள்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications