நியூயார்க் சாலைக்கு கல்பனா சாவ்லாவின் பெயர்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
நியூயார்க் நகரில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் குயீன்ஸ் பகுதியில் உள்ள 74 வது தெருவுக்கு மறைந்தவிண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் கொலம்பிய விண்கலம் விண்ணில் வெடித்துச் சிதறியபோது அதில் இருந்த கல்பனாசாவ்லாவும் உயிரிழந்தார். அவரைப் பெருமைப்படுத்தவேண்டும் என்று அமெரிக்க வாழ் இந்தியர்கள் கோரிக்கைவைத்திருந்தினர்.
இந் நிலையில் 74வது தெருவில் வசிப்போர் சங்கம் கடந்த வாரம் கூடியது. இந்தக் கூட்டத்தில் தெருவின் ஒருபகுதிக்கு கல்பனா சாவ்லா வே என்று பெயர் சூட்டுவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications