கற்பக விநாயகம் மீது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதிக்கு திமுக கோரிக்கை
சென்னை:
கருணாநிதியை மிகக் கடுமையாக விமர்சித்த நீதிபதி கற்பக விநாயகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரிடம் புகார் செய்ய திமுக முடிவு செய்துள்ளது.
இது குறித்து திமுக சட்டப் பிரிவுச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதுரை கமிஷ்னர் விஜய்குமாரை நீதிபதி கற்பக விநாயகம் கேள்விகள் கேட்டது எல்லா பத்திரிக்கைகளிலும் தான் வெளி வந்தது. அதைத் தான் முரசொலியிலும் கருணாநிதி எழுதியிருந்தார்.
இதற்காக அவரை நீதிபதி கற்பக விநாயகம் கருணாநிதியை தாறுமாறாக விமர்சித்துள்ளார்.
இந்த வழக்கை கற்பக விநாயகம் விசாரிக்கக் கூடாது என அதிமுக வழக்கறிஞர் தலைமை நீதிபதியிடம் மனு தந்த நிலையில், இவ்வாறு கற்பக விநாயகம் பேசியிருக்கிறார். இதனால் அவர் தற்போது யாரையோ திருப்திபடுத்தவும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் முயல்கிறார் என்று தெரிகிறது.
அவதூறு மொழிகளால் அவர் கருணாநிதியை விமர்சித்துள்ளார். இது தேவையற்றது, சம்பந்தம் இல்லாதது. நீதிபதியின் இந்தச் செயல் நீதித்துறைக்கே களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. மக்களுக்கு நீதிபதிகள் பற்றி தவறான எண்ணம் ஏற்பட்டுவிடவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே கருணாநிதி மீது தேவையில்லமல் அவதூறு கூறிய நீதிபதி கற்பக விநாயகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரிடம் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications