மலேசியாவில் தூக்கு தண்டனை: 8 தமிழர்களை காக்க வாஜ்பாய்க்கு ஜெ. கோரிக்கை
சென்னை:
மரண தண்டனை விதிக்கப்பட்டு மலேசிய சிறையில் வாடும் 8 தமிழர்களை விடுவிக்க,கோலாலம்பூரில் உள்ளஇந்தியத் தூதரகம் மூலம் மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர்வாஜ்பாய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து வாஜ்பாய்க்கு அவர் எழுதிய கடிதத்தில்,
போதை மருந்து கடத்தியதாகப் பொய் வழக்கு போடப்பட்டு 8 அப்பாவித் தமிழர்களுக்கு மரண தண்டணைவிதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் அயல்நாட்டு சிறைகளில் வாடும் இந்தியர்கள் குறித்த பட்டியலை வெளியுறவுத்துறை தயாரித்து, அவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் மலேசியா, மாலத்தீவு மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் உள்ள இந்தியத்தூதரகங்களில் தமிழ் பேசத் தெரிந்த தமிழர்களை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். அப்போதுதான் மொழிப்பிரச்சனை ஒரு தடையாக இல்லாமல், தமிழர்கள் தங்களது குறைகளை தூதுரக அதிகாரிகளிடம் தெரிவிக்கமுடியும்.
வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் தனியார் டிராவல்ஸ் ஏஜென்ஸிகளின் உரிமங்களையும்உடனடியாக சோதனையிட வேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார்.
ஜெ. கையழுத்து போட்ட அதிமுக பிரமுகர்:
இதற்கிடையே போரூர் பஞ்சாயத்து யூனியன் அதிமுக மாணவரணி செயலாளர் எஸ். ரஹ்மான், ஜெயலலிதாவின்கையெழுத்து போல் போலியாக கையெழுத்திட்டு, கட்சித் தொண்டர்களைக் குழப்பியதாகக் கூறி, கட்சியின்அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதை ஜெயலலிதா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?











Click it and Unblock the Notifications