ஜனனியின் ஜாமீன் மனு தள்ளுபடியானது: மீண்டும் சிறையில்...
சென்னை:
கஞ்சா வழக்கில் கைதாகியுள்ள ஜனனி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம்தள்ளுபடி செய்துவிட்டது. அதே நேரத்தில் இந்த கஞ்சா வழக்கை 2 மாதங்களில் விசாரித்து முடிக்குமாறு மதுரைநீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
முதலில் இந்த ஜாமீன் மனுவை நீதிபதி கற்பகவிநாயகம் விசாரித்து வந்தார். அப்போது ஜனனியை இரவும்,பகலுமாக மதுரைக்கும் சென்னைக்கும் இழுத்தடித்த மதுரை போலீசாருக்கு கடும் டோஸ் விட்டார்.
மேலும் இந்த வழக்கின் பின்னணியில் இருப்பது யார் என்ற கேள்வியையும் எழுப்பிய நீதிபதி, ஜனனியைசிறையில் இருந்து மகளிர் காப்பகத்துக்கு மாற்றியும் உத்தரவிட்டார். அந்த நேரத்தில் வழக்கை அவர் விசாரிக்கக்கூடாது என அதிமுக தரப்பில் மனு தாக்கலானது.
இந் நிலையில் திமுக தலைவர் கருணாநிதி இந்த வழக்கை அரசியலாக்கப் பார்ப்பதாகக் குற்றம் சாட்டிய நீதிபதிகற்பக விநாயகம் விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்,
இதைத் தொடர்ந்து இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதி சொக்கலிங்கத்திடம் தரப்பட்டது. இந்த மனுவைவிசாரித்த நீதிபதி, ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதியதாக ஜனனி நீதிமன்றத்தில் பொய்யான தகவலைத் தந்துள்ளார்.
மேலும் தனக்கு ரூ. 1.4 கோடி எப்படி வந்தது என்பது குறித்தும் ஜனனி சரியான விளக்கம் தரவில்லை. இதை கஞ்சாவிற்றே அவர் சம்பாதித்ததாக போலீசார் கூறுகின்றனர். ஆனால், ஜனனியோ எப்படி பணம் வந்தது என்பதைச்சொல்லவே இல்லை. இதனால் போலீசாரின் வாதம் நம்பக் கூடியதாகவே உள்ளது.
போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் 36வது பிரிவின் கீழ் தாங்கள் தவறு செய்யவில்லை என்பதையும் ஜனனியும்தாயாரும் நிரூபிக்க வில்லை. இவற்றின் அடிப்படையில் இவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது.
இவர்கள் குற்றவாளிகளா, இல்லையா என்பதை மதுரை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். ஜூலை மாதம்11ம் தேதி முதல் ஜனனியும் அவரது தாயார் ரமீஜாவும் சிறையில் உள்ளனர். எனவே, வழக்கை இன்னும் 60நாட்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என மதுரை நீதிமன்றத்துக்கு உத்தரவிடுகிறேன்.
அப்படி 60 நாட்களில் தீர்ப்பு கிடைக்காத பட்சத்தில் இருவரும் இந்த நீதிமன்றத்தை அணுகலாம். இப்போதுமைலாப்பூர் மகளிர் காப்பகத்தில் உள்ள ஜனனியை மீண்டும் திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கஉத்தரவிடுகிறேன்.
முன்னதாக ஜனனி சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார். அரசுத் தரப்பில்சுப்ரமணியம் வாதாடினார்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications