ஜெ. வழக்கு: பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் தனி நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க பெங்களூர் நகர உரிமையியல் நீதிமன்றவளாகத்திலேயே தனி நீதிமன்றத்தை அமைக்குமாறு கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே. ஜெயின்உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூர்-ஒசூர் நெடுஞ்சாலையில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை வளாகத்தில் இந்தநீதிமன்றத்தை அமைக்கலாம் என அரசின் யோசனையை அவர் நிராகரித்துவிட்டார்.

கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கே.ஜெயினுடன், சட்ட அமைச்சர் சந்திரே கெளட இன்றுஆலோசனை நடத்திய பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் மாநகராட்சி மற்றும் டிஜிபி அலுவலத்தின் அருகே இந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. போக்குவரத்துநெரிசல் மிக்க, நகரின் மிக முக்கியமான மையப் பகுதியாகும் இது.

முதலில் பெங்களூரில் இந்த நீதிமன்றத்தை அமைப்பதா, அல்லது வேறு நகரத்தில் அமைப்பதா என்று பெரும்குழப்பத்தில் இருந்த கர்நாடக அரசு நேற்று தான் ஒரு வழியாக பெங்களூரிலேயே நீதிமன்றத்தை அமைக்கமுடிவெடுத்தது. நேற்றிரவு கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டது.

பெங்களூர்-ஒசூர் நெடுஞ்சாலை அருகே உள்ள மத்திய சிறை வளாகத்தில் தனி நீதிமன்றத்தை அமைக்க அரசுதிட்டமிட்டது.

இதையடுத்து கர்நாடக உள்துறைச் செயலாளர் அதிப் செளத்ரி தலைமையில் அதிகாரிகள் குழு பெங்களூர் மத்தியசிறைக்குச் சென்று தனி நீதிமன்றம் அமைப்பது குறித்து ஆய்வு நடத்தியது. இக் குழுவில் பெங்களூர் போலீஸ்கமிஷ்னர் மாரிச்சாமியும் இடம் பெற்றிருந்தார்.

பின்னர் இக் குழுவினர் பெங்களூர் நகர சிவில் நீதிமன்ற வளாகத்தையும் பார்வையிட்டனர். அங்கு தனி நீதிமன்றம்அமைக்க முடியுமா என்றும் ஆலோசித்தனர். இதையடுத்து இந்தக் குழு சில பரிந்துரைகளை முன் வைத்தது.

அந்தப் பரிந்துரைகளுடன் அமைச்சர் சந்திரே கெளடாவும் அட்வகேட் ஜெனரல் ஜெயராமும், கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.கே. ஜெயினை சந்தித்துப் பேசினர். அப்போது பெங்களூர் நகர உரிமையியல்நீதிமன்ற வளாகத்திலேயே ஜெயலலிதாவை விசாரிக்க தனி நீதிமன்றத்தை அமைக்க நீதிபதி ஜெயின்உத்தரவிட்டார்.

இது குறித்து சந்திரே கெளட செய்தியாளர்களிடம் பேசுகையில், பெங்களூர் மாநகராட்சி அலுவலகம் அருகேஅமைந்துள்ள நகர உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் தனி நீதிமன்றத்தை அமைக்கலாம் என்று உயர் நீதிமன்றம்பரிந்துரைத்துள்ளது.

விரைவில் இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படும். மேலும் தனி நீதிமன்றத்திற்கான நீதிபதிகளாக 4 பேரின்பெயர்களை தலைமை நீதிபதியிடம் அரசு பரிந்துரைத்துள்ளது. இதில் ஒருவரை தனி நீதிமன்ற நீதிபதியாகதலைமை நீதிபதி நாளை அறிவிப்பார். மற்றும் அரசு வக்கீல்களின் பெயர்களையும் பரிந்துரைத்துள்ளோம்.அவர்களில் யார் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடுவது என்பதையும் தலைமை நீதிபதியே முடிவு செய்வார்.

இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ள ஜெயலலிதா, நீதிமன்றத்துக்கு வரும்போது தேவையான பாதுகாப்புஏற்பாடுகளைச் செய்து தருமாறு உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவிடம் இருந்த கைப்பற்றப்பட்ட பல கோடி மதிப்புள்ள வைர, தங்க நகைகள் மற்றும் பொருள்கள்,வாகனங்களுக்கும் உரிய பாதுகாப்புத் தரப்படும். விசாரணை முடியும் வரை இந்த நகைகள் கர்நாடக அரசுக்கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

உச்ச நீதிமன்றம் கூறியுள்ளபடி டிசம்பர் 25ம் தேதிக்குள் தனி நீதிமன்றம் தயாராகிவிடும் என்றார் சந்திரே கெளடா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+