சென்னையை வாட்டப் போகும் பயங்கர குடிநீர் பஞ்சம்
சென்னை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டுவிட்டதால், விரைவில் ஏற்படவுள்ள பயங்கரமானகுடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க நெய்வேலியில் இருந்து ரயில் மற்றும் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரமுடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான ஏற்பாடுகளை குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டுள்ளது.
ஆந்திராவில் கண்டலேறு அணையிலிருந்து 3 டி.எம்.சி. நீரை மோட்டார்கள் மூலம் சென்னைக்கு பம்ப் செய்துகொள்ள அனுமதிக்குமாறு, முதல்வர் ஜெயலலிதா நேரில் வைத்த வேண்டுகோளுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடுவிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை.
அப்படியே வழங்கினாலும், அதிகபட்சமாக 1 டி.எம்.சி நீரை மட்டுமே ஆந்திரம் தரும் என்று கூறப்படுகிறது. இதைமோட்டார் பம்ப்கள் மூலம் சென்னைக்குக் கொண்டு வர ரூ. 6 கோடி செலவாகுமாம்.
இதையடுத்து சென்னையில் ஏற்படப் போகும் பயங்கரமான குடிநீர்ப் பற்றாக்குறையை சமாளிக்க அவசர காலஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
முதல்வர் ஜெயலலிதா ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பியவுடன் இந்த விஷயத்தில் இறுதிமுடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் மற்றும் சோழாவரம் ஏரிகள் வறண்டு போக ஆரம்பித்துள்ளன.மூன்றிலும் சேர்த்தே மொத்தம் 285 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. இதை வைத்து அடுத்து ஒருவாரத்துக்கு மட்டுமே சென்னைக்குக் குடிநீர் வழங்க முடியும் என்று அதிர்ச்சி குண்டைப் போடுகின்றனர் நிபுணர்கள்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications