கெட்டுப் போன சாக்லேட்டுகள் சாப்பிட்ட 75 பள்ளி மாணவிகள் மயக்கம்
சென்னை:
கெட்டுப் போன சாக்லேட்டுகளைச் சாப்பிட்ட பள்ளி மாணவிகள் 75 பேர் மயக்கமடைந்தனர். பலருக்கு வாந்தியும் ஏற்பட்டது.
சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் உள்ள சிங்காரம் பிள்ளை பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை வழக்கம் போல பூஜை நடந்தது. பூஜைக்குப் பிறகு, சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்று திரும்பியிருந்த ஒரு ஆசிரியை கொணடு வந்த சாக்லெட்டுள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.
சாக்லேட்டுகளைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவிகள் தங்களுக்கு மயக்கம் வருவதாகவும், கை, கால்கள் நடுங்குவதாகவும் ஆசிரியைகளிடம் தெரிவித்தனர். பலரும் மயங்கி விழுந்தனர். பலர் வாந்தியும் எடுத்தனர்.
தொடர்ந்து 75 மாணவிகளும் மயக்கமடைந்தனர். உடனடியாக அனைவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. மாணவிகள் யாரும் கவலைக்கிடமான நிலையில் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சாக்லெட்டுகள் கெட்டுப் போனதாக இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கருதுகினறனர். இருப்பினும் அதை 2005ம் ஆண்டு வரை பயன்படுத்தலாம் என்று லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளதால் இதை டாக்டர்கள் உறுதியாக கூறவில்லை.
சாக்லெட் சாப்பிட்டு மாணவிகள் மயக்கடைந்த தகவல் வில்லிவாக்கம் பகுதியில் பரவியதும், மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கும், மருத்துவமனைக்கும் படையெடுத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications