குமரி மீனவர்களை கடத்திய நெல்லை மீனவர்கள்
நாகர்கோவில்:
கன்னியாகுமரியைச் சேர்ந்த 10 மீனவர்களை திருநெல்வேலியைச் சேர்ந்த மீனவர்கள் கடத்திச் சென்று விட்டனர்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த நவீன் மற்றும் சின்னமுட்டம் பகுதியைச் சேர்ந்த சாண்டியோகோ ஆகியோரதுதலைமையில் 14 மீனவர்கள் 2 படகுகளில் திங்கள்கிழமை காலை மீன் பிடிக்கச் சென்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை பகுதியில் அவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது,திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் ஏராளமான பேர் அங்கு திரண்டு வந்து, 2 படகுகளையும் சூழ்ந்துகொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்திற்குள் வந்து ஏன் மீன் பிடித்தீர்கள் என்று குமரி மாவட்ட மீனவர்களிடம் வாக்குவாதம்செய்தனர். இது முற்றியதில் சாண்டியாகோவும் அவரது தந்தை சிங்கராயனும் தாக்கப்பட்டனர்.
பின்னர் 10 மீனவர்களையும், 2 படகுகளையும் மீனவர்கள் கடத்திச் சென்றனர். இந்த சம்பவம் குமரி மாவட்டமீனவர்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்படை மற்றும் மீனவர்களால் நமது மீனவர்கள் கடத்தப்பட்டு வரும் நிலையில், நமதுமீனவர்களுக்குள்ளேயே மோதல் ஏற்பட்டு கடத்தல் வரை சென்றுள்ளது வேதனைக்குரியது.
கலெக்டர்- இலங்கை துணை தூதர் பேச்சு
இந் நிலையில் இலங்கை சிறையில் வாடும் தூத்துக்குடி பகுதி மீனவர்களை விடுவிப்பது குறித்து தூத்துக்குடிமாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாராமனும், இலங்கை துணைத் தூதர் சுமித் நிகந்தலாவும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
தூத்துக்குடி வந்த சுமித் நகந்தலாவிடம், மீனவர்களை உடனடியாக விடுவிக்க ஏற்பாடு செய்யுமாறு ஆட்சித்தலைவர் ராஜாராமன் வலியுறுத்தினார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உதவுவதாக சுமித் நகந்தலாஉறுதியளித்தார்.
மேலும், தூத்துக்குடி மாவட்டம் பாப்பாத்தி, குளத்துவைப்பட்டி, மாப்பிள்ளை ஊரணி ஆகிய அகதிகள் முகாம்களில்1,856 தமிழ் அகதிகள் உள்ளனர். இவர்களில் எத்தனை பேர் இலங்கை திரும்ப தயாராக இருக்கிறார்கள் என்பதுகுறித்தும் இருவரும் விவாதித்தனர்.
தூத்துக்குடிக்கு வருவதற்கு முன் மண்டபம் அகதிகள் முகாக்கும் சுமித் சென்றிருந்தார்.
மேலும் 4 ராமேஸ்வரம் மீனவர்கள் கடத்தல்
இந் நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மேலும் 4 மீனவர்களை இலங்கை கடற்படை கடத்திச் சென்றுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தான் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 பேர் கடத்தப்பட்டனர். இந் நிலையில் மேலும் 4 பேர்கடத்தப்பட்டுள்ளது ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications